திருப்பத்தூர்: பழைய துணிகள் குடோனில் பயங்கர தீ விபத்து - இருவர் பத்திரமாக மீட்பு

ஆம்பூர் அருகே பழைய துணிகளை சேமித்து வைக்கும் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான துணிகள் எரிந்து நாசமாயின.
fire service
fire servicept desk

செய்தியாளர்: ஆர்.இம்மானுவேல் பிரசன்னகுமார்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த விவேகானந்தர் நகர் பகுதியில் இம்ரான் பாஷா என்பவர், பழைய துணிகளை வாங்கி அதை புதுப்பித்து மறுவிற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் பழைய துணிகள் வைக்கப்பட்டிருந்த குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், குடோனில் வைக்கப்பட்டிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான துணிகள் எரிந்து நாசமாயின.

Fire accident
Fire accident;pt desk

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். மேலும் தீ விபத்து ஏற்பட்ட கட்டடத்தின் மேல்மாடியில் சிக்கிய இரண்டு நபர்களை ஏணியின் மூலம் தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர்.

fire service
தென் தமிழகத்தில் நில அதிர்வா? நெல்லை ஆட்சியர் விளக்கம்!

இதனை தொடர்ந்து இந்த தீ விபத்து மின்கசிவினால் ஏற்பட்டதா அல்லது மர்ம நபர்கள் யாரேனும் தீ வைத்தார்களா என பல்வேறு கோணங்களில் ஆம்பூர் நகர காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com