\
தென் தமிழகத்தில் நில அதிர்வு
தென் தமிழகத்தில் நில அதிர்வுமுகநூல்

தென் தமிழகத்தில் நில அதிர்வா? நெல்லை ஆட்சியர் விளக்கம்!

தென் தமிழக மாவட்டங்களில் நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல்கள் வெளியான நிலையில், அது குறித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் விளக்கமளித்துள்ளார்.
Published on

நெல்லை மாவட்டம், கூடங்குளத்தை சுற்றியுள்ள கிராமங்களில் நேற்று மாலை 6 மணி அளவில் நிலஅதிர்வு உணரப்பட்டதாக அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். அதேபோல், கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்ட கடலோர பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டதாக கூறப்பட்டது.

நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன்
நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன்

ஆனால், நில அதிர்வு ஏற்பட்டதற்கான அறிவியல் பூர்வமான ஆதாரம் எதுவும் இல்லை என நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் விளக்கமளித்துள்ளார்.

தென் தமிழகத்தில் நில அதிர்வு
இது ஸ்டாலின் FORMULA : 20 ஆண்டுகளுக்குப்பின் இமாலய வெற்றி! தொடரும் மு.க.ஸ்டாலின் தேர்தல் வெற்றிகள்!

தமிழ்நாட்டில் எந்த ஒரு பகுதியிலும் நில அதிர்வு உணரப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இதனிடையே, கூடன்குளம் அணுமின் நிலையத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com