நெல்லை | “நிவாரணத் தொகை வழங்குவதில் பாரபட்சம்” - மக்கள் புகார்

நெல்லை அருகே கனமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் அரசின் நிவாரணத் தொகையை பெற மறுத்து கிராம மக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழையால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 6 ஆயிரம் ரூபாயும், மற்ற இடங்களில் ஆயிரம் ரூபாயும் நிவாரணத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, நெல்லை மாவட்டத்தில் ராதாபுரம் தொகுதிக்குட்பட்ட திசையன்விளையை அடுத்த எறும்பியூர் கிராமத்தில் அரசின் நிவாரணத் தொகையை பெற 100-க்கும் மேற்பட்ட மக்கள் நியாயவிலைக் கடையில் குவிந்தனர்.

ஆனால் அப்பகுதி அதிகம் பாதிக்கப்பட்ட பகுதி இல்லை என்பதால் அவர்களுக்கு ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இதனை ஏற்க மறுத்த அவர்கள், மற்ற இடங்களை போன்று தங்களுக்கும் 6 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டுமென நியாயவிலைக் கடை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், நிவாரணத் தொகையை பெறாமல் திரும்பிச் சென்றனர்.

நெல்லை - நிவாரணத்தொகை தொடர்பாக மக்கள் புகார்
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை இன்று திறந்து வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

ராதாபுரம் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளிலும் அரசின் நிவாரணத் தொகை முறையாக வழங்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com