கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை இன்று திறந்து வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

தென்மாவட்ட மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பான கிளாம்பக்கம் பேருந்து நிலையம் இன்று திறக்கப்படுகிறது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் புதிய தலைமுறை

தென்மாவட்ட மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பான கிளாம்பக்கம் பேருந்து நிலையம் இன்று திறக்கப்படுகிறது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை காலை 11 மணிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கிறார்.

88.52 ஏக்கர் பரப்பளவில் 14 நடைமேடைகளுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த பேருந்து நிலையத்திற்கு கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்
“அவர் சூப்பர் ஸ்டார்... ஆனா சூப்பர் human” நமீதா

சென்னை கோயம்பேடு பகுதி, ஜி.எஸ்.டி.சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், தென்மாவட்டங்களுக்கு செல்லும் மக்கள் எளிதாக பயணத்தை மேற்கொள்ள வசதியாகவும் 393 கோடியே 74 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது.

இந்த பேருந்து நிலையத்தில் இருந்து தினசரி 840 தனியார் பேருந்துகளுடன் 2,130 பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் இன்று திறக்கப்படும் நிலையில், விழாவிற்கான ஏற்பாடுகள் மும்முரமாக செய்யப்பட்டு வருவதுடன் பேருந்து நிலைய கட்டடம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கவும்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com