நெல்லை: சிறுகச் சிறுகச் சேமித்த பணத்தை நிவாரண நிதிக்கு வழங்கிய சிறுமி; நெகிழ்ந்து போன முதல்வர்!

நெல்லையில் சிறுமி ஒருவர் தனது உண்டியலில் சிறுக சிறுகச் சேமித்த பணத்தை முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியயை ஏற்படுத்தியுள்ளது.
முதல்வரிடம்  நிவாரண நிதி வழங்கிய சிறுமி
முதல்வரிடம் நிவாரண நிதி வழங்கிய சிறுமி ட்விட்டர்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாகத் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. இந்த கனமழையால் பல இடங்களில் வெள்ளநீர் சூழ்ந்து பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டதுடன் தங்களுடைய உடைமைகளையும் இழந்து வெள்ள நீரில் சிக்கித் தவித்தனர்.

பாதிக்கப்பட்ட மக்களைத் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், அமைச்சர்கள், தன்னார்வலர்கள் எனப் பலரும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுப் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டுக் கொண்டுவந்தனர். தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் வெள்ள நிவாரணம், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில் தமிழக முதல்வர் தூத்துக்குடியில் உள்ள செயின்ட் மேரிஸ் பள்ளியில் உள்ள நிவாரண முகாமிற்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி, உடைகள், சேலைகள், போர்வை, பாய், போன்ற அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார்.

முதல்வரிடம்  நிவாரண நிதி வழங்கிய சிறுமி
வெள்ள பாதிப்பு - சென்னையிலுள்ள கட்டுப்பாட்டு அறையில் முதல்வர் ஆய்வு!

இதனைத்தொடர்ந்து எட்டயபுரம் 3-வது கேட் மேம்பாலம், குறிஞ்சி நகர், போல்பேட்டை, மழை வெள்ளம் சூழ்ந்து பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டுச் சுற்றியுள்ள வெள்ள நீரை விரைந்து அகற்ற அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டார் முதல்வர்.

தொடர்ந்து கனமழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். திருநெல்வேலி பெரியார் பேருந்து நிலையம் அருகில் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறியதுடன், அவர்களுக்கு வழங்கப்படும் வசதிகள் குறித்துக் கேட்டறிந்தார். பின்னர் அரிசி, துணி, சேலை, போர்வை, பாய், பிஸ்கட், ரொட்டி, பால் பவுடர், பாட்டில் தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை 1000 பேருக்கு வழங்கினார்.

அப்போது, ​​ஆட்டோ ஓட்டுநர் பாலசுப்ரமணியன் என்பவரின் 7 வயது மகளான சேவிதா பகவதி என்ற சிறுமி, தான் சிறுக சிறுகச் சேமித்து வைத்திருந்த பணத்தை முதல்வரின் நிவாரண நிதிக்காக முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கினார். அப்போது சிறுமிக்கு முதல்வர் வாழ்த்து தெரிவித்தார்.

இதுகுறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது X தள பக்கத்தில், "நெல்லையில் சிறுகச் சிறுகச் சேர்த்த பணத்தையும் CMPRF-க்குக் கொடுத்த சிறுமி! நெகிழ்ந்தேன்; நெஞ்சம் நிறைந்தேன்!” எனப் பதிவிட்டுள்ளார்.

இதனைத்தொடர்ந்து, திருநெல்வேலி மாநகராட்சி வர்த்தக மையத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து பெறப்பட்ட நிவாரணப் பொருட்கள் குறித்த விவரங்களைக் கேட்டறிந்தார்.

பின்னர் அதனைத்தொடர்ந்து அங்குப் பேசிய முதல்வர் ஸ்டாலின், "சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ளத்தையும் தற்போது தென்மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத பெருவெள்ளத்தையும் கடும் பேரிடர்களாக அறிவித்து NDRF-ல் இருந்து கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் எனப் பலமுறை கோரிக்கை வைத்துள்ளேன். ஆனால் இன்று வரை இரண்டு பேரிடர்களும் கடும் பேரிடர்களாக அறிவிக்கப்படவில்லை. NDRF-ல் ருந்து இதுவரை கூடுதல் நிதியும் ஒதுக்கவில்லை.

முதல்வரிடம்  நிவாரண நிதி வழங்கிய சிறுமி
"வெளிநாடு செல்வதால் முதலீடுகள் வராது" - முதல்வரின் பயணம் குறித்து ஆளுநர் ரவி மறைமுக விமர்சனம்

ஒன்றிய அரசிடமிருந்து வந்த 450 கோடி ரூபாய் நிதி என்பது இந்த ஆண்டுக்கான SDRFற்கு ஒன்றிய அரசு தர வேண்டிய இரண்டாவது தவணை நிதிதான் தவிரக் கூடுதல் நிதி அல்ல. சவாலான சூழ்நிலையில் ஒன்றிய அரசு இந்த கூடுதல் நிதி தராத போதிலும், மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு மாநில அரசு நிதியைச் செலவிட்டு நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.

தென்மாவட்டங்களில் அறிவித்திருக்கக்கூடிய நிவாரண பணிகளுக்கு 500 கோடி ரூபாய்க்கு மேல் செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது மட்டும் இல்லாமல் சேதமடைந்த சாலைகள், பாலங்கள், குடிநீர் திட்டங்கள், மருத்துவமனைகள், பல்வேறு கட்டிடங்கள் போன்றவற்றைச் சீரமைக்க அதிக நிதி தேவைப்படும் என்பதால் மாநில பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து 250 கோடி ரூபாயை விடுவிக்க ஆணையிட்டுள்ளேன்.

தாமதமின்றி இந்த இரண்டு பேரிடர்களையும் கடும் பேரிடர்களாக அறிவித்து ஒன்றிய அரசு NDRFலிருந்து கேட்கப்பட்ட நிதியை உடனடியாக ஒன்றிய அரசு விடுவிக்கவேண்டும்" என்றார்.

முதல்வரிடம்  நிவாரண நிதி வழங்கிய சிறுமி
மதுரை: பராமரிப்பு பணி காரணமாக ரயில் சேவையில் மாற்றம் - தெற்கு ரயில்வே புதிய அறிவிப்பு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com