மதுரை: பராமரிப்பு பணி காரணமாக ரயில் சேவையில் மாற்றம் - தெற்கு ரயில்வே புதிய அறிவிப்பு

பராமரிப்பு பணி காரணமாக ரயில் சேவையில் மாற்றம் செய்து தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
ரயில் சேவை
ரயில் சேவைpt desk

திருச்சி காரைக்குடி மற்றும் மானாமதுரை ராமேஸ்வரம் பிரிவில் ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அந்த பகுதியில் ரயில் போக்குவரத்தில் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி திருச்சி - காரைக்குடி சிறப்பு ரயில் (06829) ஞாயிற்றுக் கிழமைகள் மற்றும் கிறிஸ்துமஸ் தினம் தவிர டிசம்பர் 31 வரை திருச்சியில் இருந்து காலை 10.15 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக மதியம் 12.15 மணிக்கு அதாவது 120 நிமிடங்கள் கால தாமதமாக புறப்படும்.

maintenance work
maintenance workpt desk
ரயில் சேவை
மிக்ஜாம் புயலை எதிர்கொள்ள தயாராகும் தமிழக அரசு!

அதேபோல் திருச்சி - ராமேஸ்வரம் - திருச்சி விரைவு ரயில்கள் (16849 - 16850) வெள்ளி, ஞாயிற்றுக் கிழமைகள் மற்றும் கிறிஸ்துமஸ் தினம் தவிர டிசம்பர் 31 வரை மானாமதுரை வரை மட்டுமே இயக்கப்படும்.

ஏற்கெனவே பாம்பன் பாலம் வேலை காரணமாக இந்த ரயில் ராமநாதபுரம் வரை இயக்கப்பட்டு வருகிறது. ஆகவே இந்த ரயில் மானாமதுரை - ராமநாதபுரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுவதாக மதுரைக்கோட்ட தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com