இது ஸ்டாலின் FORMULA : 20 ஆண்டுகளுக்குப்பின் இமாலய வெற்றி! தொடரும் மு.க.ஸ்டாலின் தேர்தல் வெற்றிகள்!

திமுகவின் தலைவராக பொறுப்பேற்றபின் நடைபெற்ற இரண்டு நாடாளுமன்றத் தேர்தல், ஒரு சட்டமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் என அனைத்திலும் தொடர்ச்சியாக வெற்றிபெற்று சாதனை படைத்து வருகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
mk stalin
mk stalinpt web

இது ஸ்டாலின் FORMULA

2004-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு, தற்போது ஒட்டுமொத்தமாக நாற்பது தொகுதிகளிலும் வெற்றிவாகை சூடியிருக்கிறது திமுக தலைமையிலான கூட்டணி. அதிலும், திமுகவின் தலைவராக பொறுப்பேற்றபின் நடைபெற்ற இரண்டு நாடாளுமன்றத் தேர்தல், ஒரு சட்டமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் என அனைத்திலும் தொடர்ச்சியாக வெற்றிபெற்று சாதனை படைத்து வருகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். கூட்டணி கட்சியினருடன் அனுசரிப்பு, சொந்தக் கட்சியினரிடம் கடுமை என ஸ்டாலின் கையாளும் வெற்றிக்கான சூத்திரம் குறித்துப் பார்ப்போம்.

திமுகவின் செயல்தலைவராக செயல்பட்டு வந்த மு.க.ஸ்டாலின், அந்தக் கட்சியின் தலைவராக இருந்த கருணாநிதியின் மறைவுக்குப்பிறகு திமுகவின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் பொறுப்பேற்றதற்குப் பிறகு நடந்த முதல் தேர்தல் 2019 நாடாளுமன்றத் தேர்தல். அதற்கு முன்பாக, 2016 தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட பல கட்சிகள், 2019-ல் திமுக தலைமையிலான கூட்டணிக்குள் வந்தன. மத்திய அரசுக்கு எதிராகப் போராட்டங்கள்,. ஆர்ப்பாட்டங்கள் என நடத்தி வந்த கட்சிகள் தேர்தலிலும் ஒன்றிணைந்தன. அந்தவகையில், விடுதலைச் சிறுத்தைகள், இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக உள்ளிட்ட பல கட்சிகள் கூட்டணிக்குள் வந்திருப்பதால், சீட்டுக்கள் ஒதுக்குவதில் சிக்கல் எழலாம் என அரசியல் பார்வையாளர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், மிகவும் சாதுர்யமாக கூட்டணிப் பேச்சுவார்த்தையை முடித்தார் ஸ்டாலின். வெளியிலிருந்து சில கட்சிகள் கூட்டணிக்குள் வரத் தயாராக இருந்தபோதும்கூட, அவர்களைப் பொருட்படுத்தாமல் துணிந்து தேர்தலை எதிர்கொண்டார் ஸ்டாலின். அந்தத் தேர்தலில் தேனி தவிர 39 தொகுதிகளில் மாபெரும் வெற்றியைப் பெற்றது அந்தக் கூட்டணி.

mk stalin
மோடி டூ பிரஜ்வல் ரேவண்ணா | பாஜக-வுக்கு அதிர்ச்சியும், ஆச்சர்யமும் தந்த தொகுதி முடிவுகள் என்னென்ன?

2021ல் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்த திமுக

அதனைத் தொடர்ந்து முதற்கட்டமாக 27 மாவட்டங்களுக்கு நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுகவுக்குச் சவாலாக திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்தது. தொடர்ந்து நடைபெற்ற 2021 சட்டமன்றத் தேர்தலிலும் சீட்டுக்களைப் பங்கீடு செய்வது மிகப்பெரிய சவாலாக மாறும், கூட்டணிகள் மாறும், குறைவான இடங்கள் கொடுத்தால் காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகள்கூட கூட்டணியை விட்டு வெளியேறும் என பலர் ஆருடம் கூறினார். மறுபுறம், 2016 தேர்தலில், கூட்டணிக் கட்சிகளுக்கு அதிக இடங்களை ஒதுக்கி அதனால், ஆட்சியைத் தவறவிட்ட அனுபவமும் ஸ்டாலின் முன்னின்றன. ஆனால், யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு காங்கிரஸுக்கு 25 இடங்கள், விசிகவுக்கு ஆறு, மதிமுகவுக்கு ஆறு, இரண்டு கம்யூனிஸ்ட்க் கட்சிகளுக்கு ஆறு என இடங்களை ஒதுக்கி, திமுக மட்டும் 173 இடங்களில் போட்டியிட்டது. மதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட, ஒட்டுமொத்தமாக 188 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு 133 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்தது திமுக.

அதற்கு முன்பாக திமுக வெற்றிபெற்ற 2006 தேர்தலில் 98 இடங்களில் வெற்றிபெற்று திமுக ஆட்சியமைக்க, மைனாரிட்டி அரசு என அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா (முன்னாள் முதல்வர்) குறிப்பிட்டு வந்தார். அது போன்ற விமர்சனங்களுக்கு வாய்ப்பளிக்காத வகையில் திமுகவை வெற்றி பெற வைத்ததில் திமுக தலைவரின் பங்கு மிகமுக்கியமானது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல், நகர்புற உள்ளாட்சித் தேர்தல்களிலும் மாபெரும் வெற்றியை திமுக கூட்டணி பதிவு செய்தது. அப்போதும், கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில், திமுக வேட்பாளர்களே போட்டியிட்டது, தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட, துணை மேயர், நகராட்சித் தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளுக்கு திமுகவினரும் முட்டிமோத, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஒற்றைக் கடிதத்தில் அதற்குத் தீர்வு கண்டார் மு.க.ஸ்டாலின். திமுகவைப் பொறுத்தவரை கீழ்மட்ட நிர்வாகிகளைக் கட்டுப்படுத்துவது தலைமைக்கு முன்னிருக்கும் சவாலான விஷயம் என்பதை அப்போது உடைத்து சுக்குநூறாக்கினார் மு.க.ஸ்டாலின்.

mk stalin
ஜூன் 8-ம் தேதி பிரதமராக மூன்றாவது முறை பதவியேற்கிறாரா மோடி? ஆலோசனைக் கூட்டத்தில் நடந்ததென்ன?

கூட்டணிச் சவால்கள்; சமாளித்த முதல்வர்

இறுதியாக தற்போது நடந்து முடிந்திருக்கும் நாடாளுமன்றத் தேர்தல். இப்போதும் கூட்டணிக் கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்குவது என்பது கடந்த தேர்தலைவிட திமுக தலைமைக்கு சவாலாக இருந்த ஒன்று. விசிக உள்ளிட்ட கட்சிகள் அதிகமான இடங்களையும் எதிர்பார்த்தன. காங்கிரஸுக்கு குறைவான இடங்களை ஒதுக்கவேண்டும் என கட்சியினரிமிருந்து அழுத்தம் வந்தது. தவிர, கமல்ஹாசனும் புதிதாக கூட்டணிக்குள் வந்திருந்தார். சட்டமன்றத் தேர்தலுக்கு கூட்டாளிகளாக இருந்த, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி என சில கட்சிகள் எங்களுக்கும் சீட்டு வேண்டும் என அழுத்தம் கொடுத்தார்கள். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஒதுக்கிய அதே இடங்களை ஒதுக்கியதோடு, கமல்ஹாசனுக்கு ராஜ்யசபாவில் இடமளித்து அனைத்து சவால்களையும் சாமர்த்தியமாகச் சமாளித்தார் மு.க.ஸ்டாலின்.

கட்சியினருக்குள் இருக்கும் அதிருப்தி, கூட்டணிக் கட்சிகளுக்கு இருக்கும் மல்லுக்கட்டுக்களை எல்லாம் தள்ளிவைத்துவிட்டு, மொத்தமாக வெற்றிபெற வைக்க வேண்டும். ஒரு பூத்தில் வாக்குகள் குறைந்தால்கூட கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அமைச்சர்களுக்கு பதவியும் பறிபோகும் என எச்சரித்திருந்தார் மு.க.ஸ்டாலின். தேர்தலுக்கு முன்பாக இருந்த பல மனமாச்சர்யங்களை மறந்து அனைத்து நிர்வாகிகளும் வெற்றிக்காக உழைத்து, இன்று திமுக கூட்டணி 100 சதவிகித வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது.,

2004-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி நாற்பது இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தது. அதற்குப் பிறகு தற்போது 100 சதவிகித வெற்றி என்பது சாத்தியமாகியிருக்கிறது. ஆனால், அப்போது இருந்ததைவிட பல்வேறு சவால்கள் திமுக தலைவர் ஸ்டாலினின் முன் இருந்தன. ஆனால், அது எல்லாவற்றையும் சமாளித்து தொடர்ந்து திமுகவை வெற்றிப்பாதையில் அழைத்துச் சென்றுகொண்டிருக்கிறார் மு.க.ஸ்டாலின். தேர்தல்களை, கூட்டணிக் கட்சிகளை சமாளிப்பதில் அவரின் தந்தையான கருணாநிதியைவிட ஒருபடி மேலே ஸ்டாலின் இருக்கிறார் என அரசியல் வல்லுநர்களின் புகழ்மாலைக்கும் சொந்தக்காரராகியிருக்கிறார்.

mk stalin
பாமகவை பின்னுக்குத் தள்ளிய நாம் தமிழர்; எத்தனை சதவீத வாக்குகள்? கடந்த காலங்களின் நிலவரம் என்ன?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com