Cyclone Fengal
Cyclone Fengalpt desk

மிரட்டும் ஃபெஞ்சல் புயல் - தயார் நிலையில் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம்

ஃபெஞ்சல் புயல் கரையை கடக்கவுள்ள நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் 290 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் இருப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Published on

செங்கல்பட்டு மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம்
வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மாவட்டத்தில் வெள்ளத்தால்
பாதிக்கப்படக்கூடிய 390 தாழ்வான இடங்கள் கண்டறியப்பட்டு
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஃபெஞ்சல் புயல்
ஃபெஞ்சல் புயல்pt desk

பொதுமக்களை பாதுகாப்பாக தங்கவைக்கும் வகையில் 290 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் இருப்பதாகவும், மழை பாதிப்பை கண்காணிக்க 15 மண்டல அலுவலர்களை கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Cyclone Fengal
Cyclone Fengal: வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு இன்று விடுமுறை...

TN Alert என்ற செல்போன் செயலியை பதிவிறக்கம் செய்து அதன்மூலம் இயற்கை இடர்பாடுகள் குறித்த முன்னெச்சரிக்கை
செய்திகளை தெரிந்து கொள்ளலாம் என்றும், மழை பாதிப்பு
தொடர்பான புகார்களை 1077 என்ற எண்ணிற்கு நேரடியாகவும், 9444272345 என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப்பிலும்
தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com