Accusedpt desk
தமிழ்நாடு
தூத்துக்குடி: கனிமொழி குறித்து அவதூறு ஆடியோ... முன்னாள் பாஜக பிரமுகர் கைது!
சாத்தான்குளத்தில் வாட்ஸ்-அப் குழு அமைத்து தூத்துக்குடி எம்.பி கனிமொழி பற்றி அவதூறாக ஆடியோ பதிவிட்ட முன்னாள் பாஜக பிரமுகர் கைது செய்யப்பட்டார்.
செய்தியாளர்: சங்கரநாராயணன்
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் மாணிக்கவாசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜதுரை (50). முன்னாள் பாஜக சிறுபான்மை பிரிவு நிர்வாகியான இவர், ஒரு வாட்ஸ்-அப் குழு அமைத்து அதில் அரசியல் மற்றும் உள்ளூர் பிரமுகர்கள் குறித்து அவதூறாக ஆடியோ மற்றும் வீடியோ வெளியிட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
Arrestfile
தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும் I.N.D.I.A. கூட்டணியின் தூத்துக்குடி மக்களவை தொகுதியின் வேட்பாளருமான கனிமொழி குறித்து அவதூறு ஆடியோ ஒன்றை இவர் நேற்று தன் வாட்ஸ்-அப் குழுவில் வெளியிட்டு இருந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து இதுகுறித்து திமுக ஐடி விங்க் சார்பில் புகார் அளித்துள்ளனர்.
கிருஷ்ணகிரி: முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,052 மது பாட்டில்கள் பறிமுதல்!
இந்த புகாரின் பேரில் சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஏசு ராஜசேகரன் தலைமையிலான போலீசார், இன்று அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.