கிருஷ்ணகிரி: முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,052 மது பாட்டில்கள் பறிமுதல்!

ஊத்தங்கரை அருகே 1052 மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ள போலீசார், தலைமறைவாக உள்ள இருவரை தேடிவருகின்றனர்.
Liquor Bottles seized
Liquor Bottles seizedpt desk

செய்தியாளர்: மு.அரிபுத்திரன்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை போலீஸ் டிஎஸ்பி பார்த்திபன் மற்றும் சில போலீசார், சிங்காரப்பேட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவர்களுக்கு சிங்காரப்பேட்டை அம்பேத்கர் நகரில் தமிழ்வாணன் என்பவருடைய வீட்டில் மது பாட்டில்களை சிலர் பதுக்கி வைத்திருப்பதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து போலீசார், அங்கு அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

Liquor Bottles seized
மதுரை: குழந்தைக்கு வாங்கிய குளிர்பானத்தில் ரப்பர் பொருள் - பொறுப்பின்றி பதிலளித்த மேலாளர்!

அப்போது உரிய அனுமதியின்றி 1052 மதுபான பாட்டில்கள் அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார், சிங்காரப்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

Liquor bottles
Liquor bottlespt desk

இது குறித்து சிங்காரப்பேட்டை இன்ஸ்பெக்டர் சந்திரகுமார் புகாரின் பேரில் சிங்காரப்பேட்டை அம்பேத்கர் நகரைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் தமிழ்வாணன் (42), அவருடைய தந்தை ரங்கன் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com