திருவேற்காடு | அம்மன் கழுத்தில் கிடந்த தங்கச் சங்கிலியை திருடிய அர்ச்சகர்; பக்தர்கள் அதிர்ச்சி!

திருவேற்காடு கருமாரியம்மன் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை அர்ச்சகரே திருடிய சம்பவம் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீ தேவி கருமாரியம்மன் ஆலயம்
ஸ்ரீ தேவி கருமாரியம்மன் ஆலயம் PT WEB

சென்னை அருகே திருவேற்காட்டில் அறநிலையத்துறைக்கு சொந்தமான ஸ்ரீ தேவி கருமாரியம்மன் ஆலயம் அமைத்துள்ளது. பிரசித்தி இந்த கோவிலுக்குத் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் கோவில் கருவறையில் உற்சவர் கருமாரியம்மன் கழுத்தில் கிடந்த இருந்த 8 சவரன் தங்கச்சங்கிலி மாயமாகியுள்ளது. இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த கோவில் நிர்வாகிகள், போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கோவிலில் தினக் கூலியாக பணிபுரிந்து வந்த அர்ச்சகர் சண்முகம் என்பவர் நகையை திருடியது தெரிய வந்துள்ளது.

ஸ்ரீ தேவி கருமாரியம்மன் ஆலயம்
“தமிழகத்தில் பாஜக வெற்றி பெறாது” - அல்வா கொடுக்கும் போராட்டத்தில் ஆர்.எஸ்.பாரதி பேச்சு

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், சண்முகத்திடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அம்மன் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை அர்ச்சகர் திருடிய சம்பவம் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com