கல்விச் சீர் கொண்டு வந்த கிராம மக்கள்pt desk
தமிழ்நாடு
திருவாரூர் | அரசு நடுநிலைப் பள்ளிக்கு கல்விச் சீர் கொண்டு வந்த கிராம மக்கள்!
முத்துப்பேட்டை அருகே அரசு நடுநிலைப் பள்ளிக்குத் தேவையான பல்வேறு பொருட்களை ஊர்மக்கள் சீராக கொண்டு வந்து கொடுத்த நிகழவு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர்: மாதவன்
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஒன்றியத்தில் அமைந்துள்ளது குன்னலூர் ஊராட்சி. இந்த ஊராட்சியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி நூறாண்டுகளை கடந்து செயல்பட்டு வருகிறது இந்தப் பள்ளியில் 100க்கும்மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகிறார்கள். இந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் பள்ளியின் சுற்றுச் சுவரை பழுது நீக்கி புதிய சுவரை அமைத்துக் கொடுத்துள்ளார்.
நூறாண்டுகள் கடந்த இந்தப் பள்ளிக்கு அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பல லட்சம் மதிப்பிலான டிவி, மேஜை, நாற்காலி பீரோ மற்றும் மாணவர்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்கள் என அனைத்தையும் வாங்கி பள்ளிக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளனர். இந்த நிகழ்வு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.