திருவள்ளூர் | சாலையில் சென்ற கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
செய்தியாளர்: எழில்
காஞ்சிபுரம் மாவட்டம் தாமல் பகுதியைச் சேர்ந்தவர் அஜீத், (27) இவர், தனக்குச் சொந்தமான காரை, ஓலா நிறுவனத்தில் வாடகைக்கு ஓட்டி வருகிறார். இந்நிலையில், மப்பேடு சுங்குவார்சத்திரம் நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் நோக்கி கார் சென்று கொண்டிருந்தது. அப்போது மப்பேடு அடுத்த கண்ணூர் பகுதியல் காரிலிருந்து திடீரென புகை வந்துள்ளது. இதையடுத்து காரை நிறுத்தி விட்டு ஓட்டுநர் கீழே இறங்கிய நிலையில், கார் மளமளவென தீப்பிடித்து எரிந்தது.
இதைக்கண்ட அப்பகுதிவாசிகள் டிராக்டரில் தண்ணீர் கொண்டு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தகவலறிந்த மப்பேடு போலீசார் கொடுத்த தகவலின்பேரில பேரம்பாக்கம் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதுகுறித்து அஜீத் கொடுத்த புகாரின் பேரில் மப்பேடு போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.