
நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் லால் சலாம் படம் அவரது மகள் சௌந்தர்யா இயக்கத்தில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. திருவண்ணாமலை நகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த நான்கு நாட்களாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அதில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொள்ள திருவண்ணாமலைக்கு வந்து அருணை பொறியியல் கல்லூரி தங்கும் விடுதியில் தங்கியுள்ளார்.
இந்நிலையில் இன்று காலை அண்ணாமலையார் கோவிலுக்கு வந்த ரஜினிகாந்த் அண்ணாமலையாரையும் உண்ணாமலை அம்மனையும் தரிசனம் செய்தார் அப்போது கோவில் நிர்வாகத்தினர் அவருக்கு பூர்ண கும்பம் மரியாதையுடன் வரவேற்று சாமி தரிசனம் செய்ய வைத்தனர்.