1,330 எழுத்துக்களை கொண்டு திருவள்ளுவர் சிலை... எங்கே வைக்கப்பட்டுள்ளது தெரியுமா?

கோவை குறிச்சி குளக்கரையில் தமிழ் எழுத்துக்களால் வடிவமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவரின் சிலை, பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. சிலையில் இருக்கும் சிறப்பம்சங்கள் என்ன என்பதை பார்க்கலாம்.
திருவள்ளுவர் சிலை
திருவள்ளுவர் சிலைபுதிய தலைமுறை

கோவையில் உள்ள பல்வேறு குளங்களின் கரைகளை, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அழகுபடுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் குறிச்சி குளக்கரையானது எழில்மிகு நடைபாதை, அலங்கார விளக்குகள், அலங்கார நுழைவு வாயில்களுடன் சிறப்பாக புனரமைக்கப்பட்டு கண்களுக்கு விருந்து படைக்கிறது.

குளக்கரைக்கு மேலும் அழகு சேர்க்கும் விதமாக, தமிழர் பெருமை போற்றும் திருவள்ளுவரின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. மற்ற சிலைகளை போன்று இல்லாமல், நாட்டிலேயே முதல் முறையாக முழுக்க முழுக்க தமிழ் எழுத்துக்களால் வடிவமைக்கப்பட்டிருக்கிறது இந்த திருவள்ளுவர் சிலை. 1,330 குறள்களை அளித்த வள்ளுவருக்கு, 1,330 எழுத்துக்களை கொண்டு சிலை உருவாக்கப்பட்டுள்ளது. அதிலும் அறம் எனும் சொல், திருவள்ளுவர் சிலையின் நெற்றி பகுதியில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

திருவள்ளுவர் சிலை
”அடிப்படை புரிதல்கூட இல்லை” - காவிநிற வள்ளுவர் படத்தைப் பகிர்ந்த ஆளுநருக்கு கனிமொழி எதிர்ப்பு!

இதுபோக சிறு சிறு சொற்களும் சிலையில் இடம் பெற்றிருக்கின்றன. துருப்பிடிக்காத கம்பிகளைக் கொண்டு 20 அடி உயரத்தில் உள்ள வள்ளுவர் சிலையை, எளிதாக பராமரிப்பதற்கு 24 பாகங்களாக உருவாக்கியிருப்பதாக அதன் வடிவமைப்பாளர்கள் கூறுகிறார்கள்.

வழக்கமான தமிழ் எழுத்துக்கள் மட்டுமல்லாமல், வட்டெழுத்துக்கள், கல்வெட்டுகளில் பயன்படுத்தப்பட்ட எழுத்து வடிவங்கள் என தமிழர் பெருமை போற்றும் சிறப்பு அம்சங்கள், கலைநயமிக்க வள்ளுவர் சிலையில் இடம்பெற்றிருப்பது பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com