”அடிப்படை புரிதல்கூட இல்லை” - காவிநிற வள்ளுவர் படத்தைப் பகிர்ந்த ஆளுநருக்கு கனிமொழி எதிர்ப்பு!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பகிர்ந்திருக்கும் காவி நிற திருவள்ளுவர் புகைப்படத்திற்கு எதிராக எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
ஆர்.என்.ரவி, கனிமொழி
ஆர்.என்.ரவி, கனிமொழிபுதிய தலைமுறை

திருவள்ளுவர் தினத்தையொட்டி இன்று, அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அந்த வகையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியும் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டிருந்த பதிவில், “திருவள்ளுவர் தினத்தில், ஆன்மிக பூமியான நமது தமிழ்நாட்டில் பிறந்த பெரும்புலவரும், சிறந்த தத்துவஞானியும் பாரதிய சனாதன பாரம்பரியத்தின் பிரகாசமான துறவியுமான திருவள்ளுவருக்கு எனது பணிவான மரியாதையை செலுத்துகிறேன்.

அவரது ஞானம் நமது தேசத்தின் சிந்தனை மற்றும் அடையாளத்தை வடிவமைத்து, வளப்படுத்தி ஒட்டுமொத்த மனித குலத்துக்கு வழிகாட்டியாகவும் உத்வேகத்தின் ஆதாரமாகவும் நீடிக்கிறது. இந்த புனிதமான நாளில், அனைவருக்கும் எனது அன்பான நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அவர் பதிவிட்டிருந்தார்.

இதில், ‘பாரதிய சனாதன பாரம்பரியத்தின் பிரகாசமான துறவியுமான திருவள்ளுர்’ என்று குறிப்பிடப்பட்டதும், அந்தப் பதிவுடன் திருவள்ளுவரின் காவி படத்தை இணைத்திருப்பதும் தற்போது சர்ச்சையாகி உள்ளது.

இதுகுறித்து திமுக எம்.பி. கனிமொழி, “திருக்குறள் மற்றும் திருவள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை. வள்ளுவரின் நிறம் மனிதநேயம்தான். வேண்டுமென்றால் வள்ளுவருக்கு கறுப்பு நிறம் போடலாம்” எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com