சர்வேயர் டிபார்ட்மெண்ட் அதிகாரிகளை வெளுத்து வாங்கிய திருவள்ளூர் ஆட்சியர்.. வைரலாகும் வீடியோ!
செய்தியாளர் - எழில்
திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் நடைபெற்றது. அப்போது திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் மாவட்ட நில அளவை அலுவலக ஆய்வாளர் ஒருவர் அவசர அவசரமாக நில ஆவணங்களில் கையெழுத்திட்டு கொடுத்துள்ளார்.. இதனையடுத்து அந்த நில ஆவணங்களுக்கு உரிமையாளர் இது குறித்து புகார் அளித்திருந்த நிலையில் இதுகுறித்து ஆட்சியர் பிரதாப் நில அளவை ஆய்வாளரை அழைத்து சரமாரியாக திட்டினார்..
அப்போது யாரைக் கேட்டு இதில் கையெழுத்து போட்டீர்கள், நீங்கள் தாசில்தாருக்கு கீழ்தான் வேலை செய்கிறீர்கள் தெரியுமா? இவ்வளவு ஸ்பீடாக ஏழு மணிக்கு கையெழுத்து போட்டு வேலை செய்திருக்கிறீர்கள் என சரமாரியாக கேள்விகளை கேட்டு வெளுத்து வாங்கினார்..
அதனைத் தொடர்ந்து பேசியவர், இதுபோன்று சர்வேயர் டிபார்ட்மெண்ட் வேலை செய்தால் நாடு எங்கேயோ போயிருக்கும் என அவேசமாக கூறினார்.
இந்நிலையில், பதில் கூற முடியாமல் நில அளவை ஆய்வாளர் திரு திரு என முழித்து அவர் கேட்ட கேள்விக்கு வேறு ஏதேதோ காரணம் சொல்லி உள்ளார்.. ஆனால் ஆட்சியர் ’நான் கேட்ட கேள்விக்கு பதிலை சொல்லுங்கள்’ எனவும் கோபமாக கேட்டபோது பதில் சொல்லியவர், அதை நான் கவனிக்காமல் கையெழுத்து போட்டு விட்டேன் வேறு ஒருவர் அதை என்னிடம் எடுத்து கொடுத்தார் என ஆய்வாளர் தெரிவித்த நிலையில் யார் அந்த நபர் அவரையும் அழைத்து வாருங்கள் இல்லையென்றால் இருவரையும் சஸ்பெண்ட் செய்து விடுவேன் என்றும் விஜிலென்ஸில் கோர்த்து விடுவேன் என்றும் ஆட்சியர் பிரதாப் கூறினார்..
அப்படி மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் ஆட்சியர் ஆய்வாளரை வெளுத்து வாங்கிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.