திருவள்ளூர் | ’ஆக்கிரமிப்புக்கு பட்டாவா!! ஏன் 100 ஏக்கருக்கு கேளுங்களேன்’ - கடிந்து கொண்ட ஆட்சியர்!
செய்தியாளர்: எழில்
’உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதாப், பொது மக்களிடம் மனுக்களை பெற்று தீர்வு கண்டார். அப்போது அங்கு வந்த மூதாட்டியின் குடும்பத்தார், ஆக்கிரமிப்பு நிலத்திற்கு பட்டா கேட்டுள்ளனர். அதனை விசாரித்த ஆட்சியர், பயன்படுத்தும் இடத்திற்கு முதலில் வரிசெலுத்துங்கள் இன்னும் 100 ஏக்கருக்கு பட்டா கேளுங்கள் ஏன் 10 ஏக்கருக்கு கேட்கிறீர்கள் என்று கடுமையாக பேசினார்.
குடியிருக்கும் இடத்திற்கு பட்டா கேளுங்கள் செடி வைத்துள்ளேன் என்றும் விவசாய நிலங்களுக்கு விளைநிலங்களுக்கு என்று பட்டா கேட்காதீர்கள் என்று கடிந்து கொண்டார். இதையடுத்து அந்த நபருக்கு அபராதக் கட்டணம் விதித்து வரி விதிக்க வேண்டும் என்றும், உடனடியாக ஆக்கிரமிப்பை அகற்றுமாறும் ஊத்துக்கோட்டை வட்டாட்சியருக்கு உத்தரவிட்டார்.
ஆக்கிரமிப்பு நிலத்திற்கு பட்டா கேட்டு வந்தவரை 10 ஏக்கருக்கு பட்டா ஏன் கேட்கிறீர்கள்? 100 ஏக்கருக்கு கேளுங்கள் என ஆட்சியர் கடிந்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.