\
 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்
2 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்pt desk

திருத்தணி: கல்குவாரி குட்டையில் கால் கழுவச் சென்ற இரு சிறுவர்களுக்கு நேர்ந்த பரிதாபம்

திருத்தணி அருகே கல்குவாரி குட்டையில் கால் கழுவச் சென்ற ஐந்தாம் வகுப்பு படிக்கும் 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
Published on

செய்தியாளர்: நரேஸ்

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ஒன்றியம் கன்னிகாபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆறுமுகம் மற்றும் முருகேசன். சகோதரர்களான இவர்கள் இருவரும் கூலித் தொழில் செய்து வருகின்றனர். இவர்களது மகன்களான கிரிநாத் மற்றும் பிரவீன் ஆகிய இருவரும் அங்குள்ள தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தனர்.

 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்
2 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்pt desk

இந்நிலையில், சிறுவர்கள் இருவரும் நேற்று மாலை அதே பகுதியில் உள்ள கல்குவாரி குட்டையில் கால் கழுவச் சென்றுள்ளனர். அப்போது இருவரும் கால் தவறி குட்டையில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தனர். இதனையடுத்து இரண்டு சிறுவர்களையும் மீட்ட உறவினர்கள், திருத்தணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.

 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்
சென்னை: மருத்துவ சீட் வாங்கி தருவதாக கூறி ரூ.85 லட்சம் மோசடி - தமிழ்நாடு பாடநூல் கழக ஊழியர் கைது

அங்கு சிறுவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருத்தணி டிஎஸ்பி கந்தன் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com