திருத்தணி | தொப்புள் கொடியோடு பெண் குழந்தையை முட்புதரில் வீசிச் சென்ற அவலம்
செய்தியாளர்: நரேஷ்
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அருகில் முட்புதரில் குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து அவ்வழியாகச் சென்ற பொதுமக்கள் சந்தேகம் அடைந்து முட்புதரில் சென்று பார்த்துள்ளனர். அப்போது முட்புதரில் தொப்புள் கொடியுடன் பிறந்து ஒருசில மணி நேரமே ஆன அழகிய பச்சிளம் பெண் குழந்தை கிடந்தது தெரியவந்தது.
இதையடுத்து உடனடியாக அந்த குழந்தையை மீட்ட பொதுமக்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மருத்துவர்கள் குழந்தைக்கு தீவிர சிகச்சை அளித்து வருகின்றனர். குழந்தையை 10 மாதங்கள் சுமந்து பெற்றெடுத்த தாய் தொப்புள் கொடியுடன் முப்புதரில் வீசிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து திருத்தணி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அழுகை சத்தம் கேட்டு உரிய நேரத்தில் பொதுமக்கள் குழந்தையை மீட்டதால், தெரு நாய்களிடமிருந்து பச்சிளம் குழந்தைக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.