\
Thirumavalavan’s ‘TN 07 CM 2031’ Car Sparks Controversy
திருமாவளவன் கார் எண்PT

’TN 07 CM 2031’ பதிவெண் காரில் திருமா.. சர்ச்சையான பயணம்.. விசிக விளக்கம்!!

’TN 07 CM 2031’ பதிவெண் கொண்ட காரில் விசிக தலைவர் திருமாவளவன் பயணித்தது சர்ச்சையாகியிருக்கும் நிலையில், விசிகவின் மாநிலப் பொருளாளர் எஸ்.எஸ். பாலாஜி இந்த விவகாரம் குறித்து விளக்கமளித்துள்ளார்.
Published on

பூவிருந்தவல்லி அருகே செம்பரம்பாக்கத்தில் உள்ள ஈவிபி (EVP) பிலிம் சிட்டியில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக திருமாவளவன் ஒரு காரில் வருகை தந்தார். அவர் வந்த காரில், முதலமைச்சர் விஜய் நடித்து கடந்த 2024-ம் ஆண்டு வெளியான "GOAT" திரைப்படத்தில் பயன்படுத்திய ”TN 07 CM 2026” பதிவெண் கொண்ட கார் பாணியில், எதிர்காலத்தை கணிக்கும் வகையில், ”TN 07 CM 2031” என்ற பதிவெண் படுத்தப்பட்டிருந்தது.

TN 07 CM 2031
TN 07 CM 2031Pt

இந்தச்சூழலில் தான், இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் தற்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருவதுடன், அரசியல் வட்டாரத்திலும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளன.

எம் பரிவாகன் என்ற செயலியின் மூலம், அவர் பயணித்த காரின் பதிவெண் 2018-ம் ஆண்டி பதிவுசெய்யப்பட்ட இருசக்கர வாகனத்தின் பதிவெண் என்பதை கண்டறிந்த நெட்டிசன்கள், போலி பதிவெண் கொண்ட காரில் விசிக தலைவர் திருமாவளவன் பயணித்ததாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Thirumavalavan’s ‘TN 07 CM 2031’ Car Sparks Controversy
'TN 07 CM 2031' என்ற பதிவெண் கொண்ட காரில் விசிக தலைவர் திருமாவளவன் பயணம்!

இந்தவிவகாரம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், விசிக மாநிலப் பொருளாளர் எஸ்.எஸ். பாலஜி இந்த விவகாரம் குறித்து விளக்கமளித்துள்ளார். அதன்படி, ”திருமா 35 ஆண்டுகள்” என்ற நிகழ்ச்சியை EVP பிலிம் சிட்டியில் தனியார் ஊடக குழு ஒன்று ஒருங்கிணைத்தது. நிகழ்ச்சியின் அனைத்து ஏற்பாடுகளும், விருது வழங்குவது என்ற அனைத்து பொறுப்புகளும் அவர்கள் தான் ஏற்றுக் கொண்டனர் எனத் தெரிவித்தார்.

மேலும், நிகழ்ச்சி ஒருங்கிணைத்த குழுவினர் PHOTO SHOOT காக இந்த கார் பயன்படுத்தியதாகவும், அதுவும் EVP அரங்கில் எடுக்கப்பட்டது எனவும் விளக்கமளித்துள்ளார்.

Thirumavalavan’s ‘TN 07 CM 2031’ Car Sparks Controversy
ஆயுள் காப்பீடு நிறுவனங்களின் செலவழிப்பு முறை.. ஒவ்வொரு 100 ரூபாயும் எப்படி செலவாகிறது?
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com