“நலமாக இருந்திருந்தால் பல சாதனைகள் படைத்திருப்பார்” - விசிக தலைவர் திருமாவளவன் இரங்கல்!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு, விசிக தலைவர் தொல். திருமாவளவன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
திருமாவளவன் இரங்கல்
திருமாவளவன் இரங்கல் pt wep

தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் அவர்கள் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தன் இரங்கலை தெரிவித்துள்ளார்.

திருமாவளவன் இரங்கல்
🔴LIVE | RIP Vijayakanth | குவிந்த தொண்டர்கள்... கடும் போக்குவரத்து நெரிசல்!

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் , "கேப்டன் விஜயகாந்த் மறைவு துயரத்தை அளிக்கிறது. அவரது மறைவு தேமுதிகவுக்கு மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் பேரிழப்புதான். கேப்டன் விஜயகாந்த் நேர்மையானவர், துணிச்சலானவர், தைரியமானவர். கட்சி ஆரம்பித்து சில ஆண்டுகளில் எதிர்க்கட்சி தலைவரானார். உடல் நலம் சரியாக இருந்திருந்தால் அரசியலில் பல சாதனைகளை நிகழ்த்தியிருப்பார்.

நாளை தமிழகம் முழுவதும் விசிக சார்பில் நடைபெற இருந்த ஆர்ப்பாட்டம் விஜயகாந்த் மறைவையொட்டி ரத்து செய்யப்படுகிறது. வரும் ஜனவரி 4- ம் தேதிக்கு அது மாற்றப்படுகிறது" என்றார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com