ஊரடங்கால் வெறிச்சோடிய சாலை: ஏடிஎம்மை உடைத்து கொள்ளை முயற்சி!!

ஊரடங்கால் வெறிச்சோடிய சாலை: ஏடிஎம்மை உடைத்து கொள்ளை முயற்சி!!

ஊரடங்கால் வெறிச்சோடிய சாலை: ஏடிஎம்மை உடைத்து கொள்ளை முயற்சி!!
Published on

ராமநாதபுரத்தில் ஏடிஎம்மை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் சாலைகளிலும், பொது இடங்களிலும் மக்களிடன் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது. இதனைப்பயன்படுத்தி ராமநாதபுரத்தில் மர்ம நபர்கள் ஏடிஎம்மை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி கிழக்கு கடற்கரை சாலையில் இயங்கி வருகிறது ஸ்டேட் பேங்க். இந்த வங்கியின் ஏடிஎம்மை உடைத்து மர்மநபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இரவில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் ஏ,டி,எம் இயந்திரம் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு வங்கி நிர்வாகத்திற்கு தகவல் அளித்துள்ளனர். மேலும் கொள்ளை முயற்சி தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com