வைகோ விளக்கம்!
வைகோ விளக்கம்!pt

மதிமுகவுக்குள் பிளவு... பின்னணியில் திமுகவா? -வைகோ விளக்கம்!

மதிமுகவில் முதன்மைச் செயலாளர் துரை வைகோவுக்கும், துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யாவுக்கும் இடையே இருந்த, மோதல்போக்கு அதிகரித்து வரும்நிலையில், கட்சியிலிருந்து யார் சென்றாலும் நெருக்கடி ஏற்படாது என்று வைகோ தெரிவித்துள்ளார்.
Published on

மதிமுகவில் முதன்மைச் செயலாளர் துரை வைகோவுக்கும், துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யாவுக்கும் இடையே இருந்த உரசல் கடந்த ஏப்ரல் மாதம் வெளிச்சத்துக்கு வந்தது. இதனால், தன்னால் கட்சியில் குழப்பம் ஏற்பட வேண்டாம் என்று தெரிவித்திருந்த துரை வைகோ தமது அதிருப்தியை வெளிப்படுத்தும் விதமாக கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக அறிவித்தார்.

இதனையடுத்து, கட்சியின் நிவாகக் குழு கூட்டத்தை சென்னையில் கூட்டி இருவரையும் கைகுலுக்க வைத்து பிரச்சினையை தீர்த்து வைத்தார் வைகோ.

ஆனால், கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற கட்சிக்கூட்டத்தில் கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் மல்லை சத்யா ஈடுபட்டு வருவதாக வைகோ குற்றஞ்சாட்டியதுடன், எச்சரிக்கையும் விடுத்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனுக்கு மாத்தையா இழைத்த துரோகம் போல், தமக்கு எதிராக மல்லை சத்யா சதி செய்து வந்ததாக கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ மறைமுகமாக சாடியுள்ளார்.

தொடர்ந்து, பூந்தமல்லியில் தென்மண்டல நிர்வாகிகள் கூட்டம் தொடர்பான போஸ்டர் மற்றும் பேனர்களில் மல்லை சத்யா படம் இருக்கக் கூடாது என மதிமு.க தலைமை அலுவலகத்தில் இருந்து உத்தரவு பறந்துள்ளது. அதன்பேரில் மல்லை சத்யா பெயர் எதிலும் இடம்பெறவில்லை.

வைகோ விளக்கம்!
ரூ.276 கோடி கட்டண பாக்கி | சுங்கச் சாவடிகளை கடந்து செல்ல அரசு பேருந்துகளுக்கு தடை..!

இதனிடைய வாரிசு அரசியலை ஏற்காமல் ம.தி.மு.கவிலிருந்து வெளியேறியவர்களுடன் மல்லை சத்யா ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. மல்லை சத்யா விரைவில் மதிமுகவில் இருந்து வெளியேற்றப்படுவார் என்றும், புதுக்கட்சியை தொடங்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கு, வாரிசு அரசியலுக்காக வைகோ தனக்கு துரோகிப் பட்டம் கொடுத்துள்ளதாக மல்லை சத்யா ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

மேலும், “ வைகோவின் உயிரை 3 முறை காப்பாற்றிய என்னை துரோகி என்று சொல்லும் அளவிற்கு துணிந்துள்ளார். வைகோ சொன்ன வார்த்தையை தாங்கிக்கொள்ள முடியாத வேதனையில் இருக்கிறேன். பூவிருந்தமல்லியில் நடைபெறும் மதிமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை.” என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இதுகுறித்து புதியதலைமுறைக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ள வைகோ, “ பல காலம் மல்லை சத்யா எனக்கு துணையாக இருந்தார். சமீபத்தில் அப்படி இல்லை. கட்சியிலிருந்து வெளியேறிய நபர்களுடன் மல்லை சத்யா தொடர்பில் இருப்பது வருத்தம் தருகிறது.

மல்லை சத்யா விவகாரத்தில் பின்னணியில் திமுக இருப்பதாக கூறப்படும் தகவலில் உண்மையில்லை. கட்சியிலிருந்து யார் சென்றாலும் நெருக்கடி ஏற்படாது. செஞ்சி ராமச்சந்திரன், எல். கணேசன் வெளியேறியபோதும் கட்சிக்குள் நெருக்கடி இல்லை. ” என்று தெரிவித்துள்ளார். இந்தவகையில், பா.ம.க-வை தொடர்ந்து ம.தி.முவிலும் உள்கட்சி பூசல் கொதிக்கத் தொடங்கியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com