ஜூன் 1-ம் தேதி முதல் இயக்கப்படும் 200 ரயில்கள்... தமிழகத்திற்கு இல்லை..!

ஜூன் 1-ம் தேதி முதல் இயக்கப்படும் 200 ரயில்கள்... தமிழகத்திற்கு இல்லை..!
ஜூன் 1-ம் தேதி முதல் இயக்கப்படும் 200 ரயில்கள்... தமிழகத்திற்கு இல்லை..!

ஜூன் 1-ம் தேதி முதல் 200 ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த ரயில்களுக்கான அட்டவணையை இந்திய ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கு மே 31-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனைத்தொடர்ந்து ஜூன் 1 ஆம் தேதி முதல் 200 ரயில்கள் முதல்கட்டமாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ரயில்கள் ஏற்கெனவே இயக்கப்பட்ட ரயில்கள்தான் எனவும் சிறப்பு ரயில்கள் இல்லை எனவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அந்த 200 ரயில்களுக்கான அட்டவணையை இந்திய ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதில் தமிழகத்திற்கான எந்த ரயில் சேவையும் இடம்பெறவில்லை. முதற்கட்டமாக அறிவிக்கப்பட்டுள்ள 200 ரயில்களுக்கு இன்று முதல் டிக்கெட் முன்பதிவு தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com