தெப்பக்காடு : கண்ணீரில் மூழ்கச் செய்த மக்னா யானை மறைவு...!

தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாமில் பாராமரிக்கப்பட்டு வந்த மக்னா யானை மூர்த்தி உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தது. யானை பாகனின் குடும்பத்தினர் மற்றும் ஊர் மக்களின் கண்ணீருக்கு இடையே உயிரிழந்த மக்னா யானைக்கு வனத்துறையினர் இறுதி மரியாதை செலுத்தினர்.

தெப்பக்காடு யானைகள் முகாமில் பராமரிக்கப்பட்டு வந்த மக்னா யானை மூர்த்தி, உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தது. யானைப்பாகனின் குடும்பத்தினர் மற்றும் ஊர் மக்களின் கண்ணீருக்கு இடையே யானை மூர்த்திக்கு வனத்துறையினர் இறுதி மரியாதை செலுத்தினர்.

யானை மூர்த்தி
யானை மூர்த்திபுதிய தலைமுறை

நீலகிரி மாவட்டம் முதுமலையில் உள்ள தெப்பக்காடு யானைகள் முகாமில் பராமரிக்கப்பட்டு வந்ததுதான் இந்த மக்னா யானை மூர்த்தி. 1990 கால கட்டங்களில் கூடலூர் மற்றும் கேரள மக்களை அச்சுறுத்திய இந்த யானை 21 பேரை கொன்றதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து 1998-ல் கூடலூர் அருகே உள்ள புளியம்பாறை பகுதியில் வைத்து இந்த யானையை வனத்துறையினர் பிடித்தனர். அப்போது யானை மூர்த்தியின் உடலை 18 முதல் 20 துப்பாக்கி குண்டுகள் துளைத்திருந்தன.

உயிருக்கு ஆபத்தான நிலையில் பிடிக்கப்பட்டிருந்தாலும், மூர்த்திக்கு தீவிர சிகிச்சை அளித்து அதன் உயிரை காப்பாற்றினர் வனக்கால்நடை மருத்துவர்கள். காயம் மற்றும் வலியிலிருந்து மீண்ட யானை மூர்த்தி, தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் மிகவும் சாதுவான யானையாகவே வலம் வந்தது. கடந்த 25 ஆண்டுகளாக இங்கு பராமரிக்கப்பட்டு வந்த நிலையில், திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

யானை மூர்த்தி
யானை மூர்த்திபுதிய தலைமுறை

அதன் ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்ததில், கல்லீரலில் லேசான பாதிப்பு ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது. எனினும் கடந்த ஓராண்டாக வனத்துறையினர் தரமான சிகிச்சை அளித்து வந்தனர். யானை உடல்நலம் தேற சிறப்பு உணவுகளும் வழங்கப்பட்டன. ஆனால், கடந்த 14ஆம் தேதி தரையில் படுத்த யானை மூர்த்தி, திரும்ப எழுந்திருக்கவே இல்லை. கால்நடை மருத்துவர்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் பலனளிக்காமல், மூர்த்தியின் உயிர் பிரிந்தது.

மூர்த்தியின் இழப்பு, யானை பாகனின் குடும்பத்தினர், ஊர் மக்கள் மற்றும் வனத்துறையினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

யானை மூர்த்தி
கோவை: பிரசவிக்கும் நிலையில் இருந்த பெண் யானை உயிரிழப்பு! என்ன நடந்தது?

குறிப்பாக, மூர்த்தியுடன் விளையாடி மகிழ்ந்த குழந்தைகள், அதனை பராமரித்த பாகன் குடும்பத்தினர், இறுதி அஞ்சலி செலுத்தும்போது கண்ணீர் விட்டு கதறி அழுதது, அங்கிருந்தவர்களை கண்கலங்க செய்தது. உயிரிழந்த யானை மூர்த்திக்கு வனத்துறை மூலம் இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.

யானை மூர்த்தி
யானை மூர்த்திபுதிய தலைமுறை

முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் வித்யா, அனைத்து வனச்சரகர்கள் மற்றும் யானை பாகன்கள் மற்றும் ஊர் மக்கள் இதில் பங்கேற்றனர்.

முகாமில் பராமரிக்கப்படும் பிற யானைகள் அணிவகுத்து நின்று தங்கள் பங்கிற்கு யானை மூர்த்திக்கு இறுதி மரியாதை செலுத்தின. பின்னர், யானையின் உடல் கூறாய்வு செய்யப்பட்டு அதே பகுதியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com