wile elephant
wile elephantpt desk

கோவை: பிரசவிக்கும் நிலையில் இருந்த பெண் யானை உயிரிழப்பு! என்ன நடந்தது?

கோவையில் பிரசவிக்கும் நிலையிலிருந்த பெண் யானை, வயிற்றிலிருந்து சிசுவுடன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Published on

கோவை வனக்கோட்டம் போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட நரசிபுரம் வனப்பகுதியில் வனப் பணியாளர்கள் ரோந்து பணி மேற்கொண்டிருந்தனர். அப்போது பெண் யானை ஒன்று இறந்த நிலையில் இருந்தது கண்டறியப்பட்டது. உடனே, வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, உடற்கூறாய்வு மேற்கொள்ளப்பட்டது.

உடற்கூறாய்வில், உயிரிழந்த பெண் யானையின் வயது 22 முதல் 25 வரை இருக்கலாம் எனவும், யானை இறந்து 2 நாட்கள் இருக்கலாம் எனவும் வனத்துறையினர் தெரிவித்தனர். யானையின் கர்ப்பப்பையில் 20 முதல் 22 மாதமுடைய ஆண் சிசு இருந்ததும், சினைப்பைகால பிரச்னையால் பெண் யானை இருந்திருக்கலாம் என்றும் உடற்கூறாய்வு செய்த மருத்துவ அலுவலர் தெரிவித்தார்.

பொதுவாக யானையின் பேறுகாலம் என்பது 18 முதல் 22 மாதம் என்ற நிலையில், இந்த யானை, குட்டி பிறக்கும் காலத்தில் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com