ohn Benny Quick Birthday
ohn Benny Quick Birthdaypt desk

தேனி | பென்னி குவிக் பிறந்த நாளை பொங்கல் விழாவாக 26 வருடங்களாக கொண்டாடி வரும் கிராமத்தினர்!

முல்லை பெரியாறு அணையை கட்டிய கர்னல் ஜான் பென்னி குவிக்கின் பிறந்த நாளை, பொங்கல் விழாவாக கிராம மக்கள் கடந்த 26 வருடங்களாக சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
Published on

செய்தியாளர்: திருக்குமார்

தேனி மாவட்டம் போடி அருகே பாலார்பட்டி கிராம மக்கள் தை திருநாளை, முல்லைப் பெரியாறு அணையை கட்டிய கர்னல் ஜான் பென்னி குவிக் பிறந்த நாள் விழாவாக வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.

பொங்கல் விழா
பொங்கல் விழாpt desk

இந்நிலையில், தை திருநாளான இன்று, ஜான் பென்னி குவிக்-ன் 184-வது பிறந்தநாளை முன்னிட்டு பாலார்பட்டி கிராமத்தினர் இசை வாத்தியங்களுடன் சிலம்பாட்டம், தேவராட்டம் ஆடி மகிழ்ந்தனர். இதையடுத்து ஜான் பென்னி குவிக்கின் உருவப்படத்தை கைகளில் ஏந்தியபடி ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் பொங்கல் பானைகளுடன் கிராமம் மக்கள் ஆரவாரத்துடன் ஊர்வலமாக வந்தனர்.

ohn Benny Quick Birthday
திருப்பூர்: 5000 பெண்கள் கலந்து கொண்ட மெகா சமத்துவ பொங்கல் விழா..!

இவர்களோடு மலேசியாவில் வாழும் தமிழ் பெண்கள் பொங்கல் விழாவை கொண்டாடுவதற்காக இந்த ;கிராமத்திற்கு வந்திருந்தனர். இதனால் அந்த கிராமமே விழாக் கோலம் பூண்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com