சடலத்தை கறிக்கடை முன் போட்டுச் சென்ற நபரால் பரபரப்பு
சடலத்தை கறிக்கடை முன் போட்டுச் சென்ற நபரால் பரபரப்புpt desk

தேனி | இலவசமாக இறைச்சி கேட்டு தராத ஆத்திரம் - சடலத்தை கறிக்கடை முன் போட்டுச் சென்ற நபரால் பரபரப்பு

தேனி அருகே இலவசமாக இறைச்சி கேட்டு தராத ஆத்திரத்தில் சடலத்தை கறிக்கடை முன்பு போட்டுச் சென்ற மனநிலை பாதிக்கப்பட்ட நபரால் பரபரப்பு எற்பட்டது.
Published on

செய்தியாளர்: ரமேஷ் கண்ணன்

தேனி அருகே உள்ள பழனிசெட்டிபட்டி பகுதியில் மணியரசன் என்பவர் ஆட்டு இறைச்சி கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், இன்று வழக்கம்போல காலையில் இருந்தே இறைச்சி வாங்க வாடிக்கையாளர் வந்து கொண்டிருந்தனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த குமார் என்பவர், மணியரசனிடம் தனக்கு இலவசமாக இறைச்சி கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

அதற்கு மணியரசன் கறி தர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த குமார், அவரை மிரட்டிவிட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றுள்ளார். இதையடுத்து அங்கு வந்த குமார், மயானத்தில் புதைக்கப்பட்டிருந்த ஒரு சடலத்தை எடுத்து வந்து கடையின் முன்பாக போட்டுச் சென்றுள்ளார். இதனால் இறைச்சி வாங்க வந்த மக்கள் அதிர்ச்சியடைந்தனர். தகவல் அறிந்து வந்த பழனிசெட்டிபட்டி போலீசார், அங்கிருந்த சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

சடலத்தை கறிக்கடை முன் போட்டுச் சென்ற நபரால் பரபரப்பு
வேளச்சேரியில் நாய் கடித்து 7 மாத குழந்தை உள்பட 8 பேர் காயம்..!

இதைத் தொடர்ந்து சடலத்தை கறிக்கடை முன்பு போட்டுச் சென்ற குமார் என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். குமார், சற்று மனநிலை சரியில்லாதவர் என்பது முதற்கட்ட விசாரணைக்குப் பின் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com