வேளச்சேரி
வேளச்சேரிமுகநூல்

வேளச்சேரியில் நாய் கடித்து 7 மாத குழந்தை உள்பட 8 பேர் காயம்..!

வேளச்சேரியில் 7 மாத கைக்குழந்தை உட்பட 8 க்கும் மேற்பட்டோரை தெரு நாய் கடித்து குதறியுள்ளது.
Published on

வேளச்சேரி பகுதியில் பவானி தெருவில் வசித்து வரும் நாகேந்திரனின் 7 மாத குழுந்தையுடன் அவரது தாயார் வீட்டின் வாசலில் அமர்திருந்துள்ளார். அப்போது அங்கு ஓடிவந்த தெரு நாய் ஒன்று நகேந்திரனின் தாயாரை கை மற்றும் காலில் கடித்தது. இதில் கையில் இருந்து தவறி விழுந்த குழந்தையையும் நாய் கடித்தது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் நாயை அங்கிருந்து விரட்டினர்.

வேளச்சேரி
டெபாசிட் இழந்தது நாதக.. கடந்த தேர்தலை விட 2 மடங்கு வாக்குகள் கிடைத்தது எப்படி? களம் சொல்வதென்ன?

அங்கிருந்து சென்ற நாய் பார்க் அவன்யூ முதல் தெரு மற்றும் இரண்டாம் தெருவில் மேலும் சிலரை கடித்துள்ளது. 9 வயது சிறுவன் உள்ளிட்ட 8-க்கும் மேற்பட்ட நபர்களை அந்த நாய் கடித்துள்ளது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். 7 மாத குழந்தையின் கையில் காயம் பலமாக உள்ளதால் தையல் போட வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com