வெறிச்சோடிய வகுப்பறைகள்
வெறிச்சோடிய வகுப்பறைகள் pt desk

தேனி | சுடுகாட்டுக்குச் செல்ல பாதை கேட்டு மலைகிராம மக்கள் நூதனப் போராட்டம்

ஆண்டிபட்டி அருகே மலை கிராமத்தில் சுடுகாட்டிற்குச் செல்ல பாதை கேட்டு குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் கிராம மக்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Published on

செய்தியாளர்: மலைச்சாமி

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகாவிற்கு உட்பட்ட உப்புத்துறை மலை கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் சுடுகாட்டிற்குச் செல்ல பயன்படுத்தி வந்த பாதையை கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு அடைக்கப்பட்டது. இதனால் கடந்த மூன்று மாதங்களாகவே சுடுகாட்டுக்குச் செல்ல பாதை பாதை இல்லாததால் கிராம மக்கள் அவ்வப்போது போராடி வந்தனர்.

இந்நிலையில், இன்று குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் இருந்தனர். பள்ளியில் 100 மாணவ மாணவிகள் படிக்கும் நிலையில், 50 மாணவர்கள் வரை வகுப்பிற்கு வந்த நிலையில், பள்ளிக்கு வந்த கிராம மக்கள் 30 மாணவர்களை தங்களது வீடுகளுக்கு அழைத்துச் சென்றனர். இதனால் 20க்கும் குறைவான மாணவர்களே வகுப்பறையில் இருந்ததால் வகுப்பறைகள் வெறிச்சோடி காணப்பட்டது.

வெறிச்சோடிய வகுப்பறைகள்
நெல்லை | வந்தே பாரத் ரயில் மீது கற்களை வீசி தாக்கிய மர்ம நபர்கள் - ரயில்வே போலீசார் விசாரணை

இது குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் கேட்ட போது, வருவாய்த் துறை அதிகாரிகளுக்கும், கல்வித்துறை அதிகாரிகளுக்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. கிராம மக்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளனர் என்று தெரிவித்தார். இது குறித்து ஆண்டிப்பட்டி வட்டாட்சியர் தெரிவித்த போது, இது சம்பந்தமாக உப்புத்துறை மலை கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com