வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்pt desk
தமிழ்நாடு
நெல்லை | வந்தே பாரத் ரயில் மீது கற்களை வீசி தாக்கிய மர்ம நபர்கள் - ரயில்வே போலீசார் விசாரணை
திருநெல்வேலி - சென்னை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் மீது கற்களை வீசி தாக்கிய மர்ம நபர்கள். ஜன்னல் கண்ணாடி உடைந்ததாக தகவல். ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
செய்தியாளர்: மணி சங்கர்
திருநெல்வேலி - சென்னை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ். ரயில் நேற்று காலை நெல்லையில் இருந்து சென்னைக்கு சென்று கொண்டிருந்தது. அப்போ கயத்தாறு அருகே உள்ள கடம்பூர் ரயில் நிலையம் அருகே உள்ள் தங்கம்மாள்புரம் கேட் பகுதியில் மர்ம நபர்கள் கற்களை வீசி தாக்கியுள்ளனர். இதில், ஜன்னல் கண்ணாடி உடைந்துள்ளது. நல்வாய்ப்பாக பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
புதுக்கோட்டை | அரசு தொடக்கப் பள்ளியின் 70வது ஆண்டு விழா - கல்விச் சீர்வரிசை கொண்டு வந்த கிராம மக்கள்
இதனை அடுத்து ரயில் கார்டு மதுரை ரயில்வே கண்ட்ரோல் ரூமுக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் கண்ணன் வழக்குப் பதிவு செய்து ரயில் மீது கற்களை வீசி தாக்கிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.