கடும் பனிமூட்டம்
கடும் பனிமூட்டம்pt desk

தேனி | கனமழையை தொடர்ந்து கடும் பனிமூட்டம் - முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்ற வாகனங்கள்!

பெரியகுளம் பகுதியில் கன மழையை தொடர்ந்து கடும் பனிமூட்டம் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்றனர்.
Published on

செய்தியாளர்: J.அருளானந்தம்

வங்கக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக தேனி மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலார்ட் விடுக்கப்பட்டது. இதனால் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வந்தது. நேற்று பிற்பகல் 2 மணி வரை மழை தொடர்ந்த நிலையில், முற்றிலும் குறைந்தது.

கடும் பனிமூட்டம்
கடும் பனிமூட்டம்pt desk

இதனைத் தொடர்ந்து பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு 10 மணி முதல் காலை வரை கடும் பனிமூட்டம் ஏற்பட்டது. இந்நிலையில், கடும் பனிமூட்டம் காரணமாக சாலைகளில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டபடி செல்கின்றன.

கடும் பனிமூட்டம்
ஈரோடு | வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுமிகளை விரட்டிக் கடித்த தெருநாய் - 5 பேர் காயம்

அதிகாலை முதலே துவங்கப்படும் பனிமூட்டம் காரணமாக எதிரே வரும் வாகனங்கள் கூட தெரியாத நிலையில் உள்ளது. பலர் முகப்பு விளக்கு போடாமல் ஓட்டி வருவதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com