ADMK Campaign
ADMK Campaignpt desk

தேர்தல் பரப்புரையின் போது மயங்கி விழுந்த தேனி அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளர்

தேனி நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் நாராயணசாமிக்கு ஆதரவாக கடுமையான வெயிலில் வாக்கு சேகரித்த தேனி அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளர் முருக்கோடை ராமர் மயக்கமடைந்தார்.
Published on

செய்தியாளர்: மலைச்சாமி

தேனி நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளராக நாராயணசாமி போட்டியிடுகிறார். அவர் இன்று கடமலைகுண்டு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கிராமங்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவருடன் தேனி அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளர் முருக்கோடை ராமரும் இருந்தார்.

ADMK Campaign
ADMK Campaignpt desk

கடமலைக்குண்டு பகுதியில் பிரசாரத்தை முடித்துவிட்டு மயிலாடும்பாறை நோக்கி பிரசார வாகனம் சென்று கொண்டிருந்தபோது திடீரென ராமர் மயக்கமடைந்தார். இதையடுத்து அங்கிருந்து நிர்வாகிகள் அவரை வாகனத்தில் இருந்து கீழே இறக்கி கடமலைக்குண்டு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். தொடர்ந்து அவர் அங்கே சிகிச்சை பெற்றார்.

ADMK Campaign
மோடி எத்தனை முறை தமிழகம் வந்தாலும் பருப்பு வேகாது – ஆர்.எஸ்.பாரதி

இதனால் சிறிது நேரம் அதிமுக வேட்பாளர் நாராயணசாமியின் பிரசாரம் தடைபட்டது. இதையடுத்து மயக்கமடைந்த மாவட்ட செயலாளர் முருக்கோடை ராமர் இல்லாமல் அடுத்த ஊரில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர் அதிமுக-வினர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com