மோடி எத்தனை முறை தமிழகம் வந்தாலும் பருப்பு வேகாது – ஆர்.எஸ்.பாரதி

இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் மோடி வாலாட்டலாம். ஆனால், தமிழகத்தில் ஆட்ட முடியாது, என்று திமுக அமைப்புச் செயளாலர் ஆர்.எஸ்.பாரதி ஆவேசமாக பேசினார்.
RS Bharathi
RS Bharathi PT (file image)

செய்தியாளர்: ஆவடி நவீன் குமார்

சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற வேட்பாளார் டிஆர்பாலு அவர்களை ஆதரித்து அமைச்சர் சேகர் பாபு தலைமையில் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று சிறப்புரையாற்றினார். அப்போது அவர்...

PM Modi
PM ModiFile Image

எங்கே மோடி வாலாட்டினாலும் இங்கு ஆட்ட முடியாது, வட மாநிலம், ஆந்திரா என அனைவரையும் மிரட்டி வருகிறார்கள். ஆனால், தமிழகத்தில் கால் செருப்பை கூட அவரால் தொட்டுக் கூட பார்க்க முடியாது. பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்ததன் மூலம் மக்கள் பயனடைந்துள்ளதால் வாக்களிக்க தயாராக உள்ளனர்.

RS Bharathi
”மாண்டியாவின் வளர்ச்சியே முக்கியம்” - பாஜகவில் இணைந்தார் சுயேட்சை எம்.பி சுமலதா! யார் இவர்?

இதனை பொறுத்துக் கொள்ள முடியாமல் பிரதமர் மோடி ஏற்கெனவே 4 முறை வந்துவிட்டார் இன்னும் 4 முறை வர உள்ளார். எத்தனை முறை தமிழகம் வந்தாலும் பருப்பு வேகாது. ராகுல் காந்தி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்ற ஒரு தேர்தல் வாக்குறுதிக்காகவே ஓட்டு போடலாம் என்று ஆர்.எஸ்.பாரதி பேசினார்.

NIA
NIAPT DESK

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், நாட்டை முன்னேற்ற பல கனவுகள் உள்ளது என மோடி கூறியது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், மோடி இன்னும் 20 வருஷம் கூட கனவு காணட்டும் என்று சுறினார்.

RS Bharathi
மக்களவை தேர்தல்|”படித்த இளைஞர்களுக்கு வேலை இருக்கா? இல்லையா?” - ப.சிதம்பரம் Vs அண்ணாமலை சொல்வதென்ன?

பெங்களூரு குண்டு வெடிப்பில் பாஜக நிர்வாகியை NIA விசாரிக்க உள்ளது குறித்து கேட்டதற்கு... குண்டு தயாரிக்கிறவனும் பிஜேபி காரன்தான், போட்றவனும் பிஜேபி காரன்தான், குண்டு வைத்திருப்பவனும் பிஜேபி காரன்தான், மத்திய அமைச்சர் போன்று பொய் குண்டை அவிழ்த்து விடுபவர்களும் அவர்கள்தான் என குற்றம் சாட்டினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com