கணவன் மனைவி எடுத்த விபரீத முடிவு
கணவன் மனைவி எடுத்த விபரீத முடிவுpt desk

தேனி | நோய்களால் அவதிப்பட்டு வந்த கணவன் - மனைவி எடுத்த விபரீத முடிவு

கம்பத்தில் விஷம் அருந்தி கணவன் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Published on

செய்தியாளர்: சுரேஷ்குமார்

தேனி மாவட்டம் கம்பம் கோம்பை ரோடு பகுதியைச் சேர்ந்தவர்கள் மனோஜ் (32) - தீபிகா(24) தம்பதியர். இவர்களுக்கு திருமணமாகி ஒரு பெண், ஒரு ஆண் குழந்தை உள்ளனர்.

இந்நிலையில், மனோஜ்க்கு தீராத உடல் வியாதிகள் இருந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் தொடர்ந்து மருத்துவம் பார்த்து வந்த மனோஜ், வேலைக்குச் செல்ல முடியாமல் தவித்து வந்துள்ளார்.

Tragedy
Tragedypt desk

இந்நிலையில் இவரது மனைவி தீபிகாவிற்கும் அவ்வப்போது வலிப்பு நோய் இருந்து வந்துள்ளது. இதனால் மன அழுத்தத்தில் இருந்து வந்த மனோஜ், நேற்று விஷம் அருந்தியுள்ளனர்.

இதையடுத்து அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர் சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

கணவன் மனைவி எடுத்த விபரீத முடிவு
ஓசூர் | வெட்டுக் காயங்களுடன் சடலமாக கிடந்த இளைஞர் - போலீசார் விசாரணை

இதற்கிடையே அவரது மனைவி தீபிகா மூச்சு விட முடியாமல் சிரமப்பட்டுள்ளார் இதனை அடுத்து அவரை சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவருக்கு திடீரென வலிப்பு வந்துள்ளது. இதனை அடுத்து தீபிகாவும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக கம்பம் வடக்கு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com