\
Tomorrow the third cabinet meeting
Tomorrow the third cabinet meetingTN Govt

நாளை TVK அமைச்சரவை கூட்டம் : முக்கிய முடிவுகளை எடுக்கப்போகும் விஜய்.. வெளியாகும் அறிவிப்புகள் என்ன?

முதல்வர் விஜய் தலைமையில் நாளை மூன்றாவது அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.
Published on: 
Summary

முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய திட்டங்கள், நிர்வாக முடிவுகள், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை, கைதிகள் தப்பிய விவகாரம், மின்சார கொள்முதல் விவாதம் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்புக்கான தீர்வுகள் குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு ஆட்சியமைத்து 5 மாதங்கள் முடிவடைந்துள்ளன. இது வரை முதல்வர் விஜய் தலைமையில் இரண்டு அமைச்சரவை கூட்டம் நடைபெற்றுள்ள நிலையில், நாளை மூன்றாவது அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.

தலைமைச் செயலகத்தில் நாளை காலை 10:30 மணி அளவில் நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் முக்கியத் திட்டங்கள் மற்றும் நிர்வாக ரீதியில் முக்கிய முடிவுகள் எடுப்பது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்ட உள்ளது. தமிழகத்தில் புதிய தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி அளிப்பது, அரசின் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்துவது, அரசு துறைகளின் செயல்பாடுகள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது தொடர்பாகவும் ஆலோசிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

TN Govt

இரு நாட்களுக்கு முன்னர் தேனி சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பிய விவகாரம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதே போல புழல் மத்திய சிறையில் இருந்து இரு கைதிகள் தப்பிய விவகாரமும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதன் காரணமாக இந்த அமைச்சரவை கூட்டத்தில் இந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் தமிழ்நாடு அரசு அதிக விலைக்கு மின்சாரத்தினை கொள்முதல் செய்வதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில், அது குறித்தும் இந்த அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளதாக சொல்லப்படுகிறது. அதோடு அத்தியாவசிய பொருள்களின் விலை அதிகரித்துள்ள நிலையில், அதனை சரி செய்வது எப்படி என்பது குறித்தும் இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என கருதப்படுகிறது.

தவெக அறிவித்த பல்வேறு வாக்குறுதிகளை செயல்படுத்துவது குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றும், அமைச்சரவை கூட்டம் முடிந்து அதற்கான முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளது எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Tomorrow the third cabinet meeting
ஒரே இடத்தில் நின்ற 'அர்னாப் புயல்': 165 KM வேகத்தில் சுழன்றடித்த காற்று|அடுத்து நடக்கப்போவது என்ன ?
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com