”வருத்தம் தெரிவியுங்கள்... இல்லையென்றால்...” - திருடிய பைக்குடன் விட்டுசெல்லப்பட்ட கடிதம்!
திருடிய இருசக்கர வாகனத்தை நான்கு நாட்கள் கழித்து மன்னிப்பு கடிதத்துடன் திருடன் விட்டுச் சென்ற சுவாரஸ்யமான சம்பவம் சிவகங்கை மாவட்டத்தில் நடந்துள்ளது.
ப்ளாக் பாண்டா என்ற பெயரில் எழுதப்பட்ட மன்னிப்பு கடிதம்தான் தற்போது இணையதளத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. டி. பழையூர் கிராமத்தை சேர்ந்த வீரமணி என்பவர், வீட்டு வாசலில் நிறுத்தப்பட்ட இவரது இருசக்கர வாகனம்தான் திருடுபோயுள்ளது.
இதுதொடர்பாக காவல் நிலையத்தில் அவர் புகாரளித்தார். இந்நிலையில், நான்கு நாட்கள் கழித்து திருடி சென்ற வாகனத்தை வீட்டு வாசலில் திருடன் திருப்பி விட்டுச் சென்றுள்ளான். அதுமட்டுமல்ல, திருடிய பைக்குடன் ஒரு கடிதத்தையும் ரூ 1500 பணத்தையும் விட்டுவிட்டு சென்றுள்ளார்.
அந்த கடிதத்தில், “ அவசரத்துக்கு பைக்கை எடுத்துட்டேன். தவறை உணர்ந்து 450 கி.மீ தூரம் பயணித்து பைக்கை கொண்டுவந்துள்ளேன். ரு.1500 பணம் பெட்ரோல் டேங்க்கில் இருக்கு. எப்படியும் என்னை கெட்ட வார்த்தையால் பேசியிருப்பீர்கள். அதற்கு நீங்கள் வருத்தம் தெரிவிக்க வேண்டும். இல்லையென்றால் நாங்கள் வருந்த வைப்போம்.” என்று எழுதப்பட்டுள்ளது .