சீமான் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தத் திட்டம்.. தபெதிக நிர்வாகிகள் 10 பேர் கைது
செய்தியாளர் சாந்தகுமார்
சென்னை நீலாங்கரையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீடு உள்ளது. ‘சமீப காலமாக சீமான் தந்தை பெரியார் குறித்து அவதூறாக பேசுகிறார்’ என பெரியாரிய இயக்கங்கள் கூட்டமைப்பினர் சீமானனின் வீட்டை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக, தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் சீமான் வீட்டை முற்றுகையிட வந்தபோது கார் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தனர். அது தொடர்பாக நீலாங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில், சீமான் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்த, தபெதிக நிர்வாகிகள் மாவட்ட தலைவர் குமரன் தலைமையில், இராயப்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கி அங்கு திட்டமிட்டுள்ளனர். இந்தத் தகவலறிந்து விடுதிக்கு சென்ற போலீசார் தபெதிக மாவட்ட தலைவர் குமரன், சுரேஷ், பிரசாந்த் உள்ளிட்ட 10 பேரை கைது செய்து அங்கேயே வைத்து விசாரித்தனர்..
திட்டமிடப்பட்ட இடம் இராயப்பேட்டை காவல் நிலையத்தில் வருவதால் அங்கு ஒப்படைப்பதா, அல்லது சீமான் வீடு இருக்கும் நீலாங்கரை காவல் நிலையத்தில் ஒப்படைப்பதா என போலீசார் ஆலோசனை நடத்தினர். பின், ராயப்பேட்டை காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.