புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கி காப்புரிமைக்காக விண்ணப்பித்ததில் முதலிடத்தில் கெத்தாக தமிழ்நாடு!

புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கி காப்புரிமைக்காக விண்ணப்பித்திருப்பதில் மகாராஷ்டிராவை முந்தி தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது.
மாதிரிப்படம்
மாதிரிப்படம்pt web

இந்திய மென்பொருள் நிறுவனங்களின் சங்கமான நாஸ்காம் புதிய கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமைகள் குறித்த விரிவான ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.

இதில் கடந்த 2023-24ஆம் நிதியாண்டில் நாடெங்கும் 83 ஆயிரம் கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமை கோரப்பட்டுள்ளதாகவும் இதில் தமிழகத்தில் இருந்து அதிகபட்சமாக 9.3% விண்ணப்பங்கள் வந்துள்ளதாகவும், மகாராஷ்டிராவில் இருந்து 6.8% விண்ணப்பங்கள் வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவை மூலமாக கொண்ட காப்புரிமை விண்ணப்பங்களில் 70% சென்னை அலுவலகத்திற்கு மட்டுமே வந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலானவை ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மற்றும் மருத்துவத்துறை சேவை சார்ந்தவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில அரசு அளித்து வரும் மானியங்கள், கண்டுபிடிப்புகளுக்கான ஆய்வக வசதிகள், ஆராய்ச்சிகளுக்கு உகந்த சூழல் ஆகியவையே தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு காரணங்களாக நாஸ்காம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு காப்புரிமை விண்ணப்பங்கள் வந்துள்ளதாகவும் நாஸ்காம் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. குறிப்பாக காப்புரிமை கோரி விண்ணப்பித்திருக்கும் பெண்கள் எண்ணிக்கை 11.6% ஆக அதிகரித்திருப்பதாகவும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது. DEEP TECH SECTOR எனப்படும் கடினமான சவால்கள் நிறைந்த தொழில்நுட்ப பிரிவில் அதிகளவில் விண்ணப்பங்கள் வந்திருப்பதாகவும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது. தொழில்நுட்பத்துறையில் இந்தியா மிகப்பெரிய வளர்ச்சியை நோக்கி முன்னேறி வருவது இந்த ஆய்வறிக்கை மூலம் தெரியவருவதாகவும் நாஸ்காம் கூறியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com