இன்று தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை.!
இன்று தென்மேற்கு பருவமழை தொடங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தெற்கு வங்கக்கடல், அந்தமான் கடல், அந்தமான்-நிகோபார் தீவுகள் வழியாக பருவமழை முன்னேறும் நிலையில், தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தொடர்கிறது. இதனால் அடுத்த நாட்களில் மழை தீவிரம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தென்மேற்கு பருவமழை இன்று தொடங்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தெற்கு வங்கக்கடலின் சில பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகள், அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளில் தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும்அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்தகாற்றழுத்த தாழ்வு பகுதி, அதே இடத்தில் நிலவுவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் மழைக்கு வாய்ப்பு.!
தமிழகத்தில் ஒரு வாரத்துக்கு மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தேனி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் எனவும் கூறப்பட்டுள்ளது. திண்டுக்கல், தேனி, கோவை, நீலகிரி மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் கணித்துள்ளது. நகரின் ஒருசிலஇடங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 முதல் 29 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

