பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியரை தாக்கிய பொதுமக்கள்

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியரை தாக்கிய பொதுமக்கள்
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியரை தாக்கிய பொதுமக்கள்

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியரை பெற்றோர் மற்றும் பொதுமக்கள் சரமாரியாக தாக்கினர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட கோனாப்பட்டு அடுத்த வேங்கடத்தான் வட்டம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிபவர் விஜயன். தற்போது அந்த பள்ளியில் 9 மாணவ மாணவிகள் மட்டுமே பயின்று வருகின்றனர்.

இந்நிலையில் இன்று ஆசிரியர் விஜயன், ஐந்தாம் வகுப்பு பயிலும் மாணவிக்கு கல்வி கற்றுக் கொடுப்பது போல் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதையடுத்து வீட்டிற்குச் சென்ற மாணவி, ஆசிரியர் தன்னிடம் தவறாக நடந்து கொள்கிறார் என தன்னுடைய பெற்றோரிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் பள்ளிக்கு விரைந்து சென்று ஆசிரியரை சரமாரியாக தாக்கியுள்ளனர். பின்பு தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருப்பத்தூர் கிராமிய காவல்துறையினர் மற்றும் வட்டார கல்வி அலுவலர் மாதேஷ் ஆசிரியர் விஜயன் மீது விசாரணை மேற்கொண்டு துறை சார்ந்த நடவடிக்கையை துரிதமாக எடுப்போம் என்று உத்திரவாதம் அளித்ததின் அடிப்படையில் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com