\
மழை நிவாரணம்: தமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது

மழை நிவாரணம்: தமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது

மழை நிவாரணம்: தமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது
Published on
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் இடங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய நிவாரணப் பணிகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை செய்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.
நாமக்கல் கவிஞர் மாளிகையில் இன்று மாலை 5 மணியளவில் அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. மழையால் ஏற்பட்ட சேதங்கள், நிவாரண நிதி அளிப்பது உள்ளிட்டவை குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்க இருப்பதாக தெரிகிறது. கனமழை எச்சரிக்கையாலும், அமைச்சர்கள் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருந்ததாலும் நேற்று நடைபெறவிருந்த அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெறுகிறது.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com