சென்னை: ரசாயன கிடங்கில் பயங்கர தீ விபத்து!

சென்னை புழல் அருகே அமைந்துள்ள தனியாருக்கு சொந்தமான பிளாஸ்டிக், ரப்பர் தயாரிப்புகளுக்கான மூலப்பொருட்கள் வைக்கப்பட்ட ரசாயன கிடங்கில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
சென்னை - ரசாயன கிடங்கில் தீவிபத்து
சென்னை - ரசாயன கிடங்கில் தீவிபத்துபுதிய தலைமுறை

சென்னை புழல் அருகே அமைந்துள்ள தனியாருக்கு சொந்தமான பிளாஸ்டிக், ரப்பர் தயாரிப்புகளுக்கான மூலப்பொருட்கள் வைக்கப்பட்ட ரசாயன கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை கட்டுப்படுத்தும் பணியில் 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் ஈடுபட்டுள்ளன.

சென்னை புழல் அருகே பல்லாவரத்தை சேர்ந்த அனந்தகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமாக பிளாஸ்டிக், ரப்பர் தயாரிக்கும் தொழிற்சாலை அமைந்துள்ளது. இங்கு பிளாஸ்டிக் மற்றும் ரப்பர் தயாரிப்புக்கான மூலப்பொருட்கள் வைக்கப்பட்ட கிடங்கில் திடீரென நேற்று நள்ளிரவு 12 மணி அளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

சென்னை - ரசாயன கிடங்கில் தீவிபத்து
எடப்பாடி பழனிசாமியின் சாட்சியப்பதிவு உயர்நீதிமன்றத்தில் தாக்கல்: கொடநாடு வழக்கில் புதிய திருப்பம்!

இது குறித்து அப்பகுதி தீயணைப்புத்துறை மற்றும் புழல் காவல் துறையினருக்கும் தகவல் அளிக்கப்பட்டது. இதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் தீயை கட்டுபடுத்த முயன்றனர். இருப்பினும் கட்டுக்கடங்காமல் தீ பரவியதால் அம்பத்தூர், ஆவடி, கொளத்தூர், மாதவரம், வியாசர்பாடி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு நிலையங்களில் இருந்தும் தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

கிட்டதட்ட தொடர்ந்து 6 மணி நேரமாக தீயணைப்பு துறையினர் தீயை கட்டுபடுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com