நோயாளிக்கு கட்டு போட்ட தூய்மை பணியாளர்
நோயாளிக்கு கட்டு போட்ட தூய்மை பணியாளர்pt desk

தென்காசி | அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு கட்டு போட்ட தூய்மை பணியாளர் - வைரல் வீடியோ

சிவகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்த நோயாளி ஒருவருக்கு தூய்மை பணியாளர் கட்டு போடும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
Published on

செய்தியாளர்: டேவிட்

தென்காசி மாவட்டம் சிவகிரியில் உள்ள அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் பற்றாக்குறையால் விபத்து மற்றும் உடல் நலக்குறைவால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாத அவலநிலை உள்ளது.

இந்நிலையில் காயம் ஏற்பட்ட நோயாளி ஒருவர் சிகிச்சைகாக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது; வழக்கம் போல் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் இல்லாததால் மருத்துவமனையில் உள்ள தூய்மைப் பணியாளர் ஒருவர் அந்த நோயாளிக்கு கட்டுப்பட்டு சிகிச்சை அளித்துள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. தென்காசி மாவட்டத்தில் பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றகுறையால் இச்செயல் நடைபெறுகிறது என சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர். அரசு மருத்துவமனைகளில் போதிய மருத்துவர்களும் செவிலியர்கள் பற்றாக்குறையை நீக்க அரசு கவனம் செலுத்தி புதிய பணியாளர்களை நியமிக்க வேண்டும் . அப்படி இருக்கும் பட்சத்தில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கலாம்.

நோயாளிக்கு கட்டு போட்ட தூய்மை பணியாளர்
வாணியம்பாடி | நர்சிங் பயிற்சி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - மருத்துவமனை உரிமையாளர் மீது புகார்

இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் விளக்கம் கேட்டபோது... முறையான ஆய்வு செய்த பின்னர் வீடியோவில் இருக்கும் நபர் தவறில் ஈடுபட்டிருந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com