தென்காசி: இருவேறு இடங்களில் நிகழ்ந்த சோக சம்பவம் - கிணற்றில் மூழ்கி சிறுவன், சிறுமி உயிரிழப்பு

தென்காசியில் சேர்ந்தமரம் அருகே இருவேறு இடங்களில் கிணற்றில் விழுந்து சிறுவன், சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Rescue
Rescuept desk

செய்தியாளர்: டேவிட்

தென்காசி மாவட்டம் சேர்ந்தமரம் அருகே உள்ள குமந்தபுரத்தை சேர்ந்தவர் மந்திரி. இவரது மகன் உஷான் காந்த் (9), கிணற்றின் அருகே சென்றுள்ளார். அப்போது கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளார். அதைக் கண்ட உஷான் காந்த்-ன் தம்பி வீட்டில் சென்று கூறியுள்ளார்.

Rescue
Rescuept desk

இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த உறவினர்கள் போது உஷான் காந்த்-ஐ சடலமாக மீட்கப்பட்டுள்ளளார். இது குறித்து கடையநல்லூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Rescue
மயிலாடுதுறை: புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டின் கழிவுநீர் தொட்டியில் பெண்ணின் எலும்புக் கூடு

அதேபோல், சங்கரன்கோவில் அருகே உள்ள கரைகண்டார் குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்க முருகன் என்பவரது மகள் கனிஷ்கா (8), நேற்றிரவு வீட்டின் அருகே உள்ள பொதுக் கிணற்றின் மீது போடப்பட்டுள்ள வலையின் மீது ஏறியுள்ளார், அப்போது வலையுடன் கிணற்றுக்குள் விழுந்துள்ளார். இதையாரும் கவனிக்காத நிலையில், கனிஷ்காவை காணவில்லை என அவரது பெற்றோர் தேடியுள்ளனர்.

Villagers
Villagerspt desk

அப்போது கிணற்றின் மேலிருந்த வலை உடைந்து உள்ளே விழுந்திருந்ததைக் கண்ட பொதுமக்கள் தெரிய காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு படை வீரர்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சுரண்டை தீயணைப்புத் துறையினர் கனிஷ்கா உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே நாளில் நடைபெற்ற இருவேறு சம்பவங்களால் கிராம மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Rescue
புதுக்கோட்டை: சந்தேக மரணம் என புகார் - 2 மாதங்களுக்கு முன் புதைக்கப்பட்ட உடல் தோண்டியெடுப்பு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com