சீர்திருத்த பள்ளி
சீர்திருத்த பள்ளிpt desk

தஞ்சை | திருட்டு வழக்கில் சீர்திருத்தப் பள்ளியில் இருந்த சிறுவன் தப்பியோட்டம்!

திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு தஞ்சை சீர்திருத்தப் பள்ளியில் இருந்து தப்பியோடிய சிறுவனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
Published on

செய்தியாளர்: ந.காதர்உசேன்

தஞ்சாவூர் மணிமண்டபம் அருகே சிறுவர் சீர்திருத்தப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் திருட்டு குற்றங்களில் ஈடுபடும் சிறுவர்கள் அடைக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், திருட்டு வழக்கு ஒன்றில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன் இந்த சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டான்.

சீர்திருத்த பள்ளி
பிரேக் ஷூ பழுது | சக்கரத்தில் திடீரென கிளம்பிய புகை.. உடனடியாக நிறுத்தப்பட்ட ரயில் - பயணிகள் அவதி

இந்நிலையில், நேற்று மாலை அந்த சிறுவன் அங்கிருந்து தப்பியோடிவிட்டான். இது குறித்து பள்ளி அலுவலர்கள் தஞ்சை தெற்கு காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய சிறுவனை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com