நிறுத்தப்பட்ட ரயில்
நிறுத்தப்பட்ட ரயில்pt desk

பிரேக் ஷூ பழுது | சக்கரத்தில் திடீரென கிளம்பிய புகை.. உடனடியாக நிறுத்தப்பட்ட ரயில் - பயணிகள் அவதி

பயணிகள் மின்சார ரயிலில் ஏற்பட்ட பிரேக் பழுது காரணமாக 40 நிமிடங்கள் தாமதமாக சென்ற ரயில்
Published on

செய்தியாளர்: உதயகுமார்

விழுப்புரத்தில் இருந்து தாம்பரம் வரை இயக்கப்படும் விழுப்புரம் பயணிகள் மின்சார ரயில் வழக்கம் போல் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ரயில் நிலையத்திற்கு காலை 6.35 மணிக்கு வந்தது. இதையடுத்து ரயில் மீண்டும் புறப்பட்டபோது, சக்கரத்தில் புகை கிளம்பி உள்ளது. இதையடுத்து பயணிகள் ஓட்டுனருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டது.

நிறுத்தப்பட்ட ரயில்
சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை பயன்படுத்தகூடாது.. அதிரடியாக இந்தியஅரசுக்கு பறந்த கடிதம்!

இந்நிலையில்டு ஓட்டுநர் கீழே இறங்கி பார்த்தபோது பிரேக் ஷூ சக்கரத்தில் இறுக்கமாக பிடித்திருந்தது தெரியவந்தது இதையடுத்து அங்கிருந்த பயணிகள் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் பிரேக் கட்டையை அகற்றினர் இதைத் தொடர்ந்து 40 நிமிடங்கள் தாமதமாக ரயில் புறப்பட்டுச் சென்றது இதனால் பயணிகள் அவதி அடைந்தனர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com