நாளை பட்ஜெட் | தமிழ்நாடு அரசின் வருவாய், செலவு ஒரு ரூபாயில் எவ்வளவு? - முழுவிபரம்
தமிழ்நாடு அரசின் பட்ஜெட் நாளை (மார்ச் 14) தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த சூழலில், அரசின் வருவாயில், ஒரு ரூபாயில் எதற்காக எவ்வளவு செலவிடப்படுகிறது என்பதை பார்க்கலாம்.
2024-25 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் நிதி திரட்டப்படுவது எப்படி மற்றும் என்னென்ன செலவுகள் என்பதை ஒரு ரூபாயில் கணக்கிடப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு ரூபாயில் மாநிலத்தின் சொந்த வரி வருவாய் 43.4 சதவீதமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுக்கடன் வகையில் 32.4 சதவீதம் நிதி திரட்டப்படுவதாகவும், கடன் வசூல் மற்றும் மூலதன வரவு 1.1 சதவீதமாகவும் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 5.2 சதவீதத் தொகை ஒன்றிய அரசிடமிருந்து பெறும் உதவி மானியங்களாக கிடைப்பதாகவும், மாநிலத்தின் சொந்த வரி அல்லாத வருவாய் வகையில் 6.8 சதவீதம் வருவாய் கிடைப்பதாகவும், ஒன்றிய வரிகளின் பங்கு 11.1 சதவீதமாகவும் கிடைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், மாநில அரசின் கடன்களுக்கு வட்டி செலுத்துதல் வகையில் 14.1 சதவீதத் தொகையும், கடன்களை திருப்பிச் செலுத்துவதற்காக 9.1 சதவீத தொகை செலவிப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க 18.7 சதவீதத் தொகையும், ஓய்வூதியம் மற்றும் ஓய்வுகால பலன்களுக்கான 8.3 சதவீதத் தொகையும் செலவிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடன் வழங்குவதற்காக 3.6 சதவீதத் தொகையும், உதவித் தொகை மற்றும் மானியங்களுக்காக 32.4 சதவீதமும் செலவிடப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மூலதனச் செலவுகளுக்காக 10.5 சதவீதத் தொகையும், செயல்பாடுகள் மற்றும் பராமரிப்புகளுக்காக 3.3 சதவீத தொகையும் செலவிடப்படுவதாக தமிழ்நாடு அரசின் பட்ஜெட் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒரு ரூபாயில் வரவு எவ்வளவு?
மாநிலத்தின் சொந்த வரி
வருவாய் - 43.4%
பொதுக்கடன் - 32.4%
கடன் வசூல் மற்றும் மூலதன வரவு - 1.1%
ஒன்றிய அரசிடமிருந்து பெறும் உதவி
மானியங்கள் - 5.2%
மாநிலத்தின் சொந்த வரி அல்லாத வருவாய் - 6.8%
ஒன்றிய வரிகளின் பங்கு - 11.1%
ஒரு ரூபாயில் செலவு எவ்வளவு?
வட்டி செலுத்துதல் - 14.1%
கடன்களை திருப்பிச் செலுத்துதல் - 9.1%
சம்பளங்கள் - 18.7%
ஓய்வூதியம் மற்றும் ஓய்வுகால பலன்கள் - 8.3%
கடன் வழங்குதல் - 3.6%
உதவித் தொகை, மானியங்கள் - 32.4%
மூலதனச் செலவுகள் - 10.5%
செயல்பாடுகளும்பராமரிப்புகளும் - 3.3%