தமிழ்நாடு பட்ஜெட் 2022 - 2023 : விவசாயிகளுக்கான புதியஅறிவிப்புகள் என்ன?

தமிழ்நாடு பட்ஜெட் 2022 - 2023 : விவசாயிகளுக்கான புதியஅறிவிப்புகள் என்ன?
தமிழ்நாடு பட்ஜெட் 2022 - 2023 : விவசாயிகளுக்கான புதியஅறிவிப்புகள் என்ன?

2022-23 ஆம் ஆண்டுக்கான தமிழக நிதிநிலை அறிக்கையில் கூட்டுறவு, பாசனம், கால்நடை பராமரிப்பு துறைகளின் கீழ் வெளியிடப்பட்ட விவசாயிகளுக்கான புதிய அறிவிப்புகள் பற்றிய முழுமையான விவரங்கள்...

பட்ஜெட் கூட்டத்தொடரில் கூட்டுறவு, பாசனம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறையில் விவசாயிகளுக்கான அறிவிப்புகள்:

பயிர் கடன் தள்ளுபடிக்காக  2,531 கோடி ரூபாயும், நகை கடன் தள்ளுபடிக்காக ஆயிரம் கோடி ரூபாயும், சுய உதவி குழுக்களின் கடன் தள்ளுபடிக்காக 600 கோடி ரூபாயும் என மொத்தம் 4131 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

இந்த நிதியாண்டில் இதுவரை 14,15,916 விவசாயிகளுக்கு 9 773 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பயிர்க் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.

வட்டியில்லா பயிர்க்கடன் திட்டத்திற்கு 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது



பொது விநியோகத் திட்டத்தை செயல்படுத்த உணவு மானியமாக 7,500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறைக்கு 13,186.34 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

கால்வாய்கள், ஏரிகள், நீர்நிலைகளை மறுசீரமைத்தல் தடுப்பணைகள், கதவணைகள் போன்ற நிலத்தடி நீர் செறிவூட்டும் கட்டமைப்புகளை ஏற்படுத்தும் பணிகளுக்கு 2,787 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பாசனத்திற்காக நீர் தங்கு தடையின்றி வழங்குவதற்காக 3,384 கோடி ரூபாய் மதிப்பீட்டில் காவிரி வடிநில பகுதிகளில் உள்ள பாசன அமைப்புகளில் நீட்டித்தல்,புனரமைத்தல், நவீனமயமாதல் போன்ற பணிகள் தொடங்கப்பட உள்ளன

சாத்தனூர்,சோலையார்,மேட்டூர், பாபநாசம் உள்ளிட்ட 64 பெரிய அணைகளை புனரமைக்கவும், அணைகளின் பாதுகாப்பு மற்றும் செயல் திறனை மேம்படுத்தவும் உலக வங்கி மற்றும் ஆசிய கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் உதவியுடன் 1064 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது, இத்திட்டத்திற்காக 300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.



குறுவை சாகுபடிக்கு கடைமடை பகுதி வரை காவிரி நீர் சென்றடைய டெல்டா பகுதியில் உள்ள 10 மாவட்டங்களில் 80 கோடி ரூபாய் செலவில் 4,964 கிலோ மீட்டர் நீளமுள்ள கால்வாய்களை தூர்வாரும் சிறப்பு பணிகளை மேற்கொள்வதற்காக இந்த அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

வள்ளலாரின் 200 வது பிறந்தநாளை முன்னிட்டு ஆதரவில்லாத, கைவிடப்பட்ட,காயமடைந்த வளர்ப்பு பிராணிகள் உள்ளிட்ட பல்வேறு விலங்குகளை பராமரிக்கும் அரசுசாரா நிறுவனங்கள் மற்றும் சேவை நிறுவனங்களுக்கு உதவி அளிப்பதற்கு 'வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள்' என்ற புதிய திட்டம் வரும் நிதியாண்டில் தொடங்கப்படும் இதற்காக 20 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது

கால்நடை பராமரிப்பு துறைக்கு 1,314.84 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com